உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பழைப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பழைப்பு

13


ரில்லை. இது, என்னைவிட, அனுபவ வாயிலாக அவருக்கு அதிகமாகத் தெரியும். ஆகவேதான் அரசியல் கவசம் நீக்கிவிட்டு, அவர் இத்தகைய நற்சேவையில் ஈடுபட வேண்டுமென விரும்புகிறேன்!

அவர் பலகாலம், சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார். சுயராஜ்ஜியம் பெறவேண்டும் என்பதற்காக போராடிய காங்கிரஸ் ஸ்தாபனமும், தனது இலட்சியத்தில் வெற்றி கண்டுவிட்டது. எனவே, நிம்மதியோடும், வேதனைப்படும் விவசாயிகளுக்குத் தனது வாழ்வினைப் பயன்படுத்தலாம். அவர் அத்தகைய நற்பணியில் ஈடுபட்டால், எங்களாலான உதவி, அவருக்கு எப்போதும் கிடைக்கும் என்று உறுதி கூறுகிறேன். நாங்கள் அரசியல் உள்நாேக்கம் அற்றவர்கள், வாேட்டுப் பிச்சைக்காக அல்ல, நாங்கள் பணிபுரிவது. ஆகவே அவர் எங்களை நம்பலாம் — எப்போதும் அவருடைய நற்பணிக்கு எங்களுடைய நல்லாதரவைத் தருவோம்!

எங்களுடைய பணி, அரசியல் லாபவேட்டையல்ல, என்று குறிப்பிட்டேன்? நாங்கள் விரும்புவதெல்லாம் புது சமுதாயம், அமைக்கப்படவேண்டும் என்பதுதான். பழமை ஒழிந்து அதனால் ஏற்படும் பாதகங்கள் மறைந்து, புதுவாழ்வு மலரவேண்டும்!

பழமையை வெறுப்பவர்கள் தான் நாங்கள். புதுமை வேண்டுமென்கிறோம், புது மலர்ச்சி தேவையென்கிறோம். பழமைப் பாசி அகற்றப்பட்டு புதுஒளி சமுதாயத்தில் பரவவேண்டு மென்பதுதான் எங்கள் நோக்கம். ஆனால் அதற்காக பழமை எல்லாவற்றையுமே விட்டாெழிக்க வேண்டும் என்று நாங்கள் கூற-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/14&oldid=1661846" இலிருந்து மீள்விக்கப்பட்டது