அன்பழைப்பு
25
சத்தியாக்கிரகம் செய்வீர்களா என்று கிண்டல் தொனிக்க, வேடிக்கையா பேசுவாா். இந்த விபரத்தைப் பத்திரிகைகளில் கண்ட போது, இந்தப் பதில் எமது இதயத்தையெல்லாம் புண்படுத்திற்று. வேதனையாேடு பேசினார் முன்னாள் முதல்வா் என்றால், வேதனை பேசினாா் போக்கும் நிலைகொண்ட இந்நாள் முதல்வா் கேலியா செய்வது!
இந்த சம்பவம் ஆட்சி பீடம் அமர்ந்தாேர் எவ்வளவு துாரம் ஆதிக்கக்காரர்களாகி விட்டனர் என்பதையல்லவா காட்டுகிறது. இப்படி ஆதிக்கவெறி அதிகமாகுமேயானால் தடுத்து நிறுத்தாமல் விடக்கூடாது. அதற்குப்பலம் வேண்டும்; பலாத்காரமல்ல. நெஞ்சுறுதி வேண்டும், நேர்மைத்திறம் வேண்டும்.
விவசாயி சிந்தும் வியர்வை சொல்லமுடியாது. சர்க்கார் தரும் காெடுமை, சமுதாயம் காட்டும் பரிவற்ற தன்மை, வேதனையானது. காலையிலே கோழி கூவுமுன் எழும்பி, கோட்டான் கிளம்பியபின் வீடு திரும்புகிறான் விவசாயி, வழியிலே தேளோ நண்டோ, வயலிலே பாம்போ , பூச்சியோ எதுவும் அவனைத் தடுப்பதில்லை. அப்படி உழைத்துப் பொருள்களைக் குவிக்கிறான். அப்பொருள்களை வைத்தக் கொண்டு கள்ள மாா்க்கட் புாிகின்றனர் ஒரு சாரர். அவனைப் பராமாிக்கும் பொறுப்புக் கொண்ட பாராள்வோராே அவனைப் பதைபதைக்கச் செய்கின்றனர்!
உற்பத்தியாகும் பொருள்களின் புள்ளி விபரங்களைப் படிக்கும்போது எனது கவனமெல்லாம் இவ்வளவு உழைப்புச் சக்தியைத்தர எவ்வளவு கஷ்டநஷ்டமடைந்திருப்பா் விவசாயி மக்கள் என்றே எண்ணிக்