28 அன்பின் உருவம்
தேவாரம் முதலியவற்றிலே சொன்னவை தங்களுடைய வாழ்க்கையிலே பெரியவர்கள் அநுபவித்துக் காட்டிய கெறிகள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் ஆக்க வழி யைக் காட்டுகிரு.ர்."கான் ஆக்க வழியிலே போகவில்லையே!” என்று புலம்புகிருர், உண்மையிலே அவர் ஆக்க வழியிலே செல்லுகிறவர். ஆலுைம் அவருடைய அன்பு அப்படிப் புலம்பச் செய்கிறது. அவர் புலம்புவதனலே ஆக்க வழி இன்னது என்பது மக்குப் புலப்படுகிறது.
ஆமாறு உன் திருவடிக்கே அகம்குழையேன் என்று தொடங்குகிருர் ஆக்க வழிப் பயனத்தில் அடிப்படையான கிலே, உள்ளம் குழைவது. ஆக்கவழியிலே அடி எடுத்து வைப்பவனுக்கு முதல் பக்குவம் உள்ளம் குழைதல். அப்படிக் குழைவதற்கு மூல காரணம் அன்பு. அன்பினுலே உருகவேண்டும். ஆக்கவழி அல்லாத சாதல் வழியிலே செல்லுகிறவர்களுக்கோ மனம் கல்லாக இருக் கின்றது. தம்முடைய கலத்தையே கினேக்கின்ற வன்மை, பிறருடைய நன்மைகளைக் கண்டால் பொருமைப்படும் வன்மை, உலகில் உள்ள பொருள்களையெல்லாம் நாம் ஆள வேண்டும் என்ற ஆசையினலே உண்டான வன்மை-இப் படிப் படலம் படலமாக அழுத்திக்கொண்டிருக்கின்ற இய இயல்புகளால் மனம் கல்லாகிப் பாறையாகி வன்மையாக இருக்கிறது. அத்தகைய மனம் நெகிழ்ந்து கொடுக்க வேண்டும். அந்த நெகிழ்ச்சி உண்டாக அன்பு என்ற சூடு ஏறவேண்டும். உலகில் உள்ள உயிர்களிடத்திலெல்லாம் அன்பு பரவினல் அப்பொழுது கெஞ்சு நெகிழும். ஆசை, லோபம், பொருமை முதலிய இறுகல் தன்மையெல்லாம் மாறிவிடும். - . . . . - பயணம் போகிறவனுக்குப் போகின்ற வழிக்கு ஏற்ற
படி சில ஏற்பாடுகள் செய்துகொள்ளவேண்டி யிருக்கும். அந்த அந்த வழியிலே போகிறவர்களிடம் சில பொதுவான