இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அமுதப் பெருங்கடல் 37
யெல்லாம் உனக்காகவே ஆக்கிக்கொண்டாய்” என்று சொல்லுகிருர் மணிவாசகர். .
சிந்தனை நின் தனக்காக்கி. ★
'பல வகையான பார்வையில் ஈடுபட்ட என்னுடைய இரண்டு கண்களையும் உன்னுடைய பாத இணைகளில் பொருத்திவிட்டாய். பல பல சபலங்களைக் கொண்ட காய் போன்ற என்னுடைய கண்களே உன்னுடைய திருப்பாத மலருக்கு ஆக்கிய்ை. அதுவரைக்கும் அந்தப் பாதத்தைப் பற்றி நான் அறியேன். இப்பொழுது அந்தப் பாதங்கள் பார்ப்பதற்கு அழகாக, கன்மையுடையவனவாக, தண்மை யுடையனவாக, தாமரை மலர்களைப் போல இருக்கின்றன என்று தெரிந்துகொண்டேன்" .
நாயினேன்றன்
கண் இணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி.
மனிதர்களில் பதவியினலும், ஆற்றலாலும், பொருள் கல்வி முதலியவற்ருலும் மேல் கீழ் என்ற வேறுபாடு இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆற்றலில் மேலான வர்கள், கீழானவர்கள் என்று சொல்லுகிருேம். எத்தனே தான் சமரசம் பேசினலும் செல்வத்திலுைம் பதவியி லுைம் உயர்ந்தவர்கள் உயர்ந்த கிலேயில் இருக்கிருர்கள். அவர்கள் தம்மை உயர்ந்தவர்கள் என்று கினைப்பது பெரி தல்ல; அவை தமக்கு இல்லாதவர்கள் தம்மைத் தாழ்ந்த வர்கள், என்று கினைத்துக்கொண்டிருக்கிருர்கள். அதனல் யார் உயர்ந்தவர்களோ அவர்களுக்கு வந்தனே புரிந்து வாழ் வதே மனித சமுதாயத்துக்கு இயல்பாகப் போய்விட்டது. எவ்வளவுதான் வாதமிட்டாலும், அபேதவாதம் பேசி லுைம் அவர்களில் பதவியினலே உயர்ந்தவர்கள் இருக்