பக்கம்:அன்பின் உருவம்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அமுதப் பெருங்கடல் - 47

என்று சொல்கிருர் மணிவாசகர். தாமரையிலே வண்ணம் இருக்கும், ஆல்ை ஒளி மிகுதியாக இராது. இறைவ னுடைய திருமேனியில் அழகு, தண்மை, வண்ணம் எல் லாம் தாமரையைப்போல இருப்பதோடு அது சுடரையும் வீசுகிறது.

அவன் அவருடைய உள்ளத்திலே புகுந்தமையினல் அவருடைய வாக்கிலே ஒளி உண்டாயிற்று; செயலிலே ஒளி உண்டாயிற்று. அவன் பெருஞ்சுடராக விளங்கு கிருன். அந்தச் சுடரின் தன்மை உலகத்தில் வேறு எந்தச் சுடருக்கும் இல்லை. அது தனியான சுடர். அதில் உண்டாகின்ற ஒளி தனியான ஒளி. அந்த ஒளியி ஞலே உண்டாகின்ற இன்ப அநுபவம் சிறப்புடையது.

தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே!

ஒரு பொருளினுடைய பெருமையை மாத்திரம் சொல் லிக்கொண்டிருந்தால் மனத்தில் ஒரளவுதான் பதியும். ஆனல் அதன் அருகிலே சிறுமையையும் வைத்துச் சொன் ல்ை அழகாக இருக்கும்; கன்ருகப் பதியும். பெரிய பொரு ளுக்குப் பக்கத்தில் சிறிய பொருளே வைத்துப் பார்த்தால் தான்பெரியபொருளின் பெருமை கன்ருக விட்டு விளங்கும். பெரிய திரு உருவத்தைப் படம் பிடிப்பவர்களெல்லாம் அதை அப்படியே பிடிக்கமாட்டார்கள். சிரவன வெண்குளம் என்ற இடத்தில் கோமடேசுவரரருடைய பெரிய சிலே இருக்கிறது. அதைப் படம் பிடிப்பவர்கள் அதனுடைய பரிமாணத்தைக் காட்டுவதற்காக அருகிலே ஓர் ஆளே கிறுத்தி எடுப்பார்கள். ஆளேயும் அத்தத் திரு உருவத்தையும் ஒருங்கே பார்க்கும் பொழுதுதான் அந்த உருவத்தின் பரிமாணம் தெரியும். அதை மாத்திரம் காட் டில்ை ஏதோ படத்தில் பெரிதாகத் தோன்றுகிறது என்று