68 - அன்பின் உருவம்
அவையனைத்தும் இந்த உடம்புக்கு இன்பம் தரச் செய்வன வாகவே முடியும். -
உடம்புக்காகக் கூத்தாடியதை யெல்லாம் இப்போது எண்ணில்ை சிரிப்பாக வருகிறது; என்ன பைத்தியக்காரத் தனம் என்று தோன்றுகிறது. இறைவன்தான் அந்த நாடகம் கடக்கும்படி செய்தான் என்ற உணர்வு இப் போது உண்டாகிவிட்டது. அவன் திருவருள் ஆணே இப்படி ஆட்டுகிறது என்று அப்போதே தெரிந்திருந்தால் எவ்வளவு கன்ருக இருந்திருக்கும்! அது தெரியாமல் ஆண் டவன் ஆட்டின்ை. அவனுடைய மாயையை என்ன வென்று சொல்வது! -
ஊனே நாடகம் ஆடு வித்தவா!
(ஊனே - உடம்பை. ஆடுவித்தவா - ஆடும்படி செய்தவாறு என்ன ஆச்சரியம்.)
★ ஊனின் நாடகம் ஒருவிதமாக ஒயத் தொடங்கியது. உள்ளம் உருகியது. இறைவன்பால் காதல் ஏற ஏற இந்த உருக்கம் மிகுதியாயிற்று. எவற்றை இன்பம் என்று எண்ணி ஒடி காடி கின்ருரோ அவற்றை இப்போது நாடுவ தில்லை. இப்போது அவற்றின் கினைவே தோன்றுவதில்லை. எப்போதும் இறைவனுடைய கினேவுதான். தம் சிறு மையை எண்ணி உருகினர்; இறைவனது கருணையை எண்ணி உள்ளம் நெகிழ்ந்தார். உடம்பு என்ற ஒன்று இருப்பதே இப்போது தோன்றவில்லை. ஊன் உருகி உள்ளொளி பெருகியது. எல்லாம் இறைவன் மயமாகக் கண்டார். அநுபவிக்கும் பொருளை எல்லாம் இறைவனுகவே உணர்ந்தார். இறைவனேயே நுகர்ந்தார். முன்பு இருந்த நிலை என்ன!. இப்போது இருக்கும் கிலை என்ன! என்ன வியப்பு இது!