பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


醒霞


நல்லது தீயது நாமறியோம், அன்னை நல்லது நாட்டுக, தீமையை ஒட்டுக !’


மேகலை நெடி துயிர்த்தாள். எதிரில் நின்று கொண்டிருந்த முன்பின் தெரியாத அந்த ஆடவனை ஏறிட்டுப் பார்க்க அஞ்சினாள்.


  • யார் இந்த மனிதர் ?... பார்த்தால் பைத்தியமாகத் தோன்றுகிறதே ? . இதுவரை இவர் பைத்தியமாக இயங்கி இருக்கிறார், இப்பொழுது யாரைக் கிறுக்காக்கத் தோன்றியிருக்கிறாரோ இந்த மகானுபாவர் ? மாடி யிலிருந்து நான் வந்ததும் இவர் இங்கே படுத்திருந்தாரே? யார் இவர் ? நேற்றிரவு இங்கு தங்க இவருக்கு எங்கிருந்து உரிமை கிடைத்தது ? யார் உரிமை கொடுத்தார்கள்


அப்பாவுக்கு தெரிந்தவரா ?. இருக்க முடியாது !... அத்தானுக்கு வேண்டியவரோ ?. அப்படியும் இராது அத்தான் ... ராத்திரி . சொல்ல வில்லையே ! ... அப்பா


எழுந்து விடுவார்களே? அத்தான் கூட மாடியிலிருந்து வரும் நேரமாகி விட்டதே ? ஆண்டவனே, யார் இவர்?.


மேகலை மேற்கொண்டு என்ன செய்வதென்று விளங்காமல் திணறினாள். மாடிப் படிகளில் பாதச் சுவடுகள் பதியும் அரவம் கேட்டது. ஐயோ... அத்தான் !’ என்று அல்லாடினாள்


ஐயா, உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கெடைக்கும். தயவு செஞ்சு இங்கிருந்து இப்பவே நகர்ந்திடுங்க !’ என்று வேண்டினாள் அவள். *