பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92பெண் அழைப்பு’க்கு எப்போது நாள் பார்க்கப் பட்டிருக்கிறது ?


உன் திருமாறனுக்கு விருந்து சாப்பாடு வேண்டுமாம்!


அன்பின் அடிமை, திருமாறன்.’


அவனுக்குச் சுய நினைவை ஈந்தவள் மேகலை துணைவன் உண்டான், உண்ட எச்சில் இலையில் துணைவி உண்டாள். தாம்பூலம் மடித்துக் கொடுத்தாள். வெண் பற்கள் சாயம் பூசிக்கொண்டன. மாடி முகப்பில் காற்றாட வந்து நின்றான், கீழே, பைத்தியக்காரன் போன்றிருந்த ஒருவனுடன் சிந்தாமணி உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். திடுக்கிட்டது நெஞ்சம். மாடிப்படியை விட்டு இறங்கிக் கீழே போக எண்ணினான் மாமல்லன், ஆனால் கதவுகள் தாழிடப்பட்டிருந்தன.


பாரதி வாய் திறந்தார்.


மாரனம்புகளென் மீது வாரி வாரி வீச-நீ


கண் பாராயோ ? வந்து சேராயோ :


அப்போது அவனுக்கு ‘இன்று முதல் இரவு 1 என்ற நினைவு பளிச்சிட்டது !