பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97



மாமல்லன் ஆழ்ந்து நோக்கினான். குலோத்துங்கனின் வலது கால் கட்டை விரல் சிமெண்டுத் தரையில் உரசிக் கொண்டிருந்தது, மாமல்லனின் இதயத்தில் என்னவெல்லா மோ சந்தேகங்கள் முளை விட்டுக் கிளப்பின.


“குலோத்துங்கன் ஏன் இப்படி மாறினான் ? சித்தம் தடுமாறியதால்தான் சிந்தனையும் தடுமாறி விட்டதா ? ஏன் இத்தகைய மாறுதல் நிகழவேண்டும் ? இவ்வளவு நாட்களாக குலோத்துங்கனைப் பற்றி, சிந்தாமணி மூச்சுக் கூட விடவில்லையே, ஏன் ? இவ்வளவு நாளாக இவன் இப்படி நாடோடியாக, சுய சிந்தனை தப்பியவனாகச் சுற்றுகிறான் சிந்தாமணியின் அத்தான் தான் இவன் என்பது வாஸ்தவமாக இருக்குமல்லவா ? அப்படியானால் இவனே அவளுடைய நிரந்தரமான அத்தானாகவும் வாய்த்து விடுவானா ?


தாரணியின் பாகத்தில் பம்பரத்தைச் சுழலவிட்ட பிறகு தனித்துக் கிடக்கும் பம்பாக் கயிறு போன்று மாமல்லன் திக்குதிசை புலப்படாமல் மயக்க நிலையில் நின்றான், அவனைக் குழப்பிய குலோத்துங்கன் புறப்படத் துடித் தான் பாதங்கள் நடைபயிலத் துடித்தன.


“குலோத்துங்கன் !’


“ஐயா.... ‘


நல்ல மனிதன்போல பதில் .ெ ச | ன் ன வ ன் குலோத்துங்கன் ஐயா என்னும் சொல் வெளிவந்த பின்னருங்கூட, இதழோரத்துக் கனிவுச் சிரிப்பு மாற்றுக் குறையாத தங்கமென ஒளிவிட்டது.


“குலோத்துங்கன், கொஞ்ச நேரம் மேலே வருகிறீங்