பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

                    96


அத்தான் முறையாம், ஆனால் பாவம், இவனுக்கு புத்தி சுவாதீனம் இல்லையாம் ! - முதன் முறை இவ்வார்த்தை களை எண்ண முடிந்த அளவுக்கு இரண்டாம் தடவை அவற்றைச் சிந்தித்துப் பார்க்க மாமல்லனுக்கு தெம்பு அறவில்லை, சிந்தாமணி சொல்லியபோது அவள் குரல் கம்மியதையும் கண்கள் கலங்கி வந்ததையும் அவனால் உணர முடிந்தது. என்றோ ஒரு நாள் பத்திரிகையில் வாசித்த செய்தியை அப்பொழுது அவன் நினைவு கூர்ந் தான். தான் காதலித்த பெண்ணை அடைய முடியா ததனால் நத்புத்தி இழந்து தவித்துக் கொண்டிருக்கும் இளைஞன் ஒருவன் தன் ஆசைக்கிளியின் அழகு முகத்தைக் கண் . கண்ட சுவர்களிலே கண்ட கண்ட கோணங்களில் வரைந்து திரிந்து கொண்டிருப்பதாக அவன் படித்திருந் தான். அந்த காலிபனின் பெயரை அவன் நினைவி படுத்திக் கொள்ளப் பிரகத்தனப்பட்டான், இயலாமல் போய்விட்டது. அந்த நாளிலே மணிமேகலை வசமிருந்த அமுதசுர பிபோல இந்த நாளில் நம் மனித மனங்கள் அமைந்து விடுமானால், அள்ள அள்ளக் குறையாமல் துள்ளித் துள்ளி ஓடி வருமே பழைய நினைவுகள்.


அதே தருணத்தில் மாமல்லனுக்கு இன்னொரு சிந்தனையும் பொறி தட்டியது. ஒருநாள் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருக்கையில், வழிச்சுவரில் கிறுக்கியவா நிருந்த பைத்தியக்காரன் ஒருவனைக் கண்டானல்லவா ?-- அதுதான் மேற்படி சிந்தனை! தொலைதுாரம் இருந்து பார்த்த அவ்வுருவத்தைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ள முடியாதுதான். ஆனாலும் அவன் எண்ணாமல் இருக்க முடியுமா ? அவன் அந்த ஆள்தான் குலோத்துங்கனோ ?” என்பதாக மீண்டும் குழப்பினான். சித்தாமணி தன் நினைவு இன்றி வெட்டுண்ட மரம்போல மயங்கி விழுந்த தற்கு ஆணி வேராகயிருந்த காரணத்தைத் தெரிவித்த பழைய பத்திரிகைச் செய்தியும் அவனுக்குப் புதிதல்லவே!