பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புத்தாய் மேகலை !


o


எல்லையற்ற பேரழகே ! எங்கும் நிறை பொற்சுடரே!


சிலம்புச் செல்வரின் அழகுத் தமிழ்ப் பேச்சு அணி வகுத்து, அணி சேர்த்து முழங்கியது. விண் அதிர, மண் அதிர ஒலி பரப்பிய சொற்பொழிவில் மக்கள் மயங்கினர். மண் மனம் சொக்கியது, கத்தும் கடல் பணி மறந்தது.


சிலம்பு பண் சேர்த்தது. பொது மக்கள் சிந்தை சேர்த்தனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வெற்றி முரசு இயம்பிய வீரத் தமிழனின் ஒவியம் விளக்கம் கண்டது. இருபதாம் நூற்றாண்டு உதட்டோரத்தில் விரல் இருத்தி மெய்ம் மறந்தது.


உச்சிக் கிழான் ஒய்வு கொள்ளத் துடித்தான், மேற்குத் திசையை நோக்கினான், பொன் வண்ணத்துகள் கடற்கரைக் கிழிஞ்சல்களோடு கொஞ்சி விளையாடின. கிழிஞ்சல்களின் உடற்பரப்பில் கறுமை மெல்ல மெல்லப் படர ஆரம்பித்தது.


திருநாள் முடிந்த கோயில் போன்று காணப்பட்டது ‘மெரினா' கடற்கரை.


மாமல்லன் கண்களை உயர்த்தினான். பார்வையில் கூர்மை அமைந்தது. உறவாடி விளையாடிய அலைகடலின்


அ-1