பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளிர்த்திருந்த திவலைகளைத் துடைத்தான். நிழற் படம் நினைவைத் துறக்க மறுத்தது. நெஞ்சைத் தொட்ட விரல்கள் தீயாகப் பொசுக்கின. நெஞ்சம் தொட்டவள் தஞ்சமென நின்று கொண்டேயிருந்தாள். உள்ளத்தில் உண்டான நடுக்கம் ரத்த நாளங்கள் ஒவ்வொன்றையும் நடுங்க வைத்தது உள்ளங்கையிலிருந்த உருவப்படம் தரையில் விழுந்தது.

“என்ன அது, அத்தான்’ என்று மேகலை கேட்ட வண்ணம் கீழே குனிந்தாள்.


அதற்குள் மாமல்லனின் சிந்தையில் : சிந்தனை யொன்று தோன்றியது. உடனே அதைக் கையில் எடுத்து விட்டான்.

‘ஒன்றுமில்லை.ஒன்றுமில்லை ‘ என்று மழுப்பினான்.

‘நல்ல வேளை, நான் பிழைத்தேன். ! என்று நிம்மதி பெற்றது. நெடு மூச்சு,

“என்னைக் கண்டு கொண்டாயா ? ஆஹா, என்னைத் தேடி வந்து விட்டாயா ?’ என்ற குரல் கேட்டது. மாமல்லனும் மேகலையும் ஏக காலத்தில் ஒரே திசையில் திரும்பினார்கள். படுத்திருத்த குலோத்துங்கன் கனவு கண்டு விழிப்பவன் போல எழுந்தான், சற்று முன் பேசிய மாதிரி இரண்டாந் தடவையும் பேசினான். விருந்தினன்.

ஒலித்த வார்த்தைகள் உள் மனத்தில் சிலையோடிக் கிடக்க, வடித்த சிலையென மேகலை மலைத்து நின்றாள்.

“நீ கீழே போயேன், மேகலை ‘ என்று இரைச்சல் போட்டான் மாமல்லன்.