பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 கூண்டுக் கிளியினை போல் -- தனிமை கொண்டு மிகவும் நொந்தேன் !' "மேகலை! மேசுலை ! மேகலை! அழைத்தவன் ஆடும் பதுமை ஆனான், அலழக்கப் பட்டவள் மாமல்லன் மூச்சுப் படும் வண்ணம் சார்ந்து நின்றாள். வந்த சடுதியில் சரிந்து விழத் துடித்துக் கொண்டிருந்த மார்புச் சேலையை கவனிக்கவில்லை. மேகலையின் நோக்கம் கொண்டவசனின் குழப்பத்துக்குரிய காரணத்தைச் சல்லடை போட்டுச் சலித்தது. அவள் நோக்கு, வேர்வை வெள்ளத்தில் உழப்பி விட்டிருந்த கணவரையே சுற்றிச் சுற்றி வலம் வந்தது. "அத்தான்!" என்று மேகலை கூப்பிட்டாள். மாமல்லனின் உடலில் ஏற்பட்ட மின் அதிர்ச்சி மட்டுப் பட்டது.ஏறிட்டு வீழித்தான், மேகலையின் மலர் விழி கள் தன்னை எங்கோ தூக்கிச் செல்வதாக அவன் உணர்ந்தான். அவளது தேன்சுவை இதழ்கள் அவனை எங்கோ அழைப்பது போன்று இருந்தது வியர்வை கொட்டினால் காய்ச்சல் விட்டு வீடும் என்பார்கள். அவனுக்கு மேனி முழுவதும் நீர் மணிகள் முத்துக் கோத்தன. அப்படியானால், மன நோவு பறந்து விட்டதா? கண்களைக் கசக்கினான். வலது ல்சு உள்ளங்கையில் இருந்த அந்தப் புகைப்படம் அவனுடைய பார்வைக்கு மறுபடியும் திரை போட்டது. தாழ்வாய்க் கட்டையில்