பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#06


சுவரருகில் வந்து நின்று மண்ணை நோக்கினான். மை இருட்டைப் பொட்டாக்கி நிலமடந்தை பேசா மடந்தை யாய்த் திகழ்வதாகப்பட்டது. விண்ணைச் சாடியது நுட்பப் பார்வை அலைந்த கங்குலின் கங்கிலே மேகலை அமர்ந்து குறுஞ் சிரிப்பின் நெட்டித் தள்ளிக் கொண்டிருந் தாள்.


அள்ளாம கொறையாது, சொல்லாம பொறக்காது!”


தெருவிலே நடமாடிச் சென்றவர்கள் பேசிக்கொண்டு போனார்கள். சந்தைக்கு வந்தவர்கள். வழித் இணைக்கும் ஆட்கள் கிடைத்தனர். வெறும் வாயில் பிடி அவலைப் போட்டார்கள். சொற்கள் அவனுடைய பிடரியை விளையாட்டுப் பலகையாக்கி சொக்கட்டான் ஆடின ஏறு முகத்திலிருந்த வெய்யில் நெற்றிப் பொட்டைத் தட்டி உடைத்தது. மேகலை, உனக்கு குலோத்துங்கனை அறிமுகம் உண்டோ ? பிஞ்சுப் பிராயத்திலேயே அவன் நெஞ்சை நீ அறிந்தவளா? பின், ஏன் என்னிடம் இவனைப் பற்றி இதுவரை எதுவும் சொல்லவில்லை? உன் நெஞ்சத்தை நீ தாழிட்டுக் கொண்டு, நான் உன் வாய்ப் பூட்டை உடைத்தால், உண்மையின் நெஞ்சம் எனக்கு எவ்வாறு தெரியும் ? ஐயம் ஒரு பேய், முன் பின் ஆராய்ச்சியின்றி அதை அண்டியவர்களை அது ஆட்டிப் படைத்த கதையை செய்தித் தாள்களிலே, சஞ்சிகை களிலே, திரைகளிலே நான் கண்டவன்தான். ஆற அமரச் சிந்தித்து ஒரு முடிவு செய்வத் தவறமாட்டேன்


தன் தோளைப் பிடித்து உலுக்கிய கையை விடுவித்து விட்டு, மாமல்லன் தலையை திருப்பியபோது, எக்காள மிட்டுச் சிரித்த வண்ணம் குலோத்துங்கன் தெளிவான முகத்தோடு நிற்பதை அறிந்தான். -