பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎻᏋ


மனத்திண்மை யுள்ளாரை நீ செய்வது மொன்றுண்டோ ?- மாயையே ‘


தமிழ்நாட்டின் தலைநகரம் மாமல்லபுரத்துக்கு நன்றி தெரிவித்து, திருமாறனின் அன்புக்கும் பண்புக்கும் வணக்கம் செலுத்தினான் மாமல்லன், தெய்வமே, உன்


கருணையே கருணை. இல்லையானால் என்னுடைய ஆசை அத்தானின் கண்ணிரை யாரால் துடைத்தெடுக்க முடியும் என்று மனத்தினுள் எண்னமிட்டாள் மேகலை.


லிங்கிச் செட்டித் தெருவில் அவர்களின் வீட்டுக்கு முன்பாக கார் நிறுத்தப்பட்டதும், மாமல்லன் தன் மனைவியைத் தோளைப் பற்றிய வண்ணம் காரிலிருந்து வெளியே அழைத்து வந்து, வீட்டின் உள்ளே கூட்டிச் சென்றான். மேகலையின் வலது கை கணவனின் தோள் பகுதியிலிருந்து விடுபட்டது. உணர்ச்சியற்ற மரக்கட்டை போன்றிருந்தான் மாகல்லன்.


கோசலை அம்மாளுக்குப் பதட்டம் கண்டது. மருமகள் முகத்தில் தேக்கி வைத்திருந்த கலவரம் அவளுக்கு அச்சத்தை உண்டாக்கியது. நெற்றி மீது கை வைத்துப் பார்த்தாள், உடம்பைத் தொட்டுப் பார்த்தாள்.


இக் காட்சியைக் கண்ட திருமாறன் விரைந்து வத்து, ‘அம்மா, உங்க மடியிலே ஒரு பாப்பா தவழப் போகுது!...”