பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

437


அது தருணம், மேகலை தோன்றினாள், நறுமணம் நாசியை அடைத்தது. கைதொட்டாள் தேட்டமுடன். நிமிர்ந்தான் உலகம் அவனுக்குக் கண்ணாம்பூச்சி காட்டியது.


மலர்க்கனை மைந்தன் மன்மதனுக்கே உரித்தான ரதியின் சிலாரூபம் ஒன்று உருவாக்கப்பட்டது.


“காதல் வாழ்கிறது !’ என்னும் மகுடம் புனைத்த திரையோவியம் குபேரபுரி படப்பிடிப்பு நிலையத்தில் வளர்ந்து கொண்டிருந்தது ஒளிக்கருவிகள் ஓசைபடாமல் செயலாற்றின, மேற்பார்வை செய்து பயிற்சியளித்தவர் காது செவிபட இரைந்து தீர்த்தார்.


மாமல்லன் மாத்திரமல்ல, அவன் துணைவியும் படப் பிடிப்பைப் பார்த்தாள்.


காதலித்த ஜோடி ஒன்று. ஆணும் பெண்ணும் இடம் மாறிப் போகிறார்கள். பெண்ணுக்கு யாரோ ஒருவன் மங்கல நான் பூட்டுகிறான். பின்னையொரு நாளிலே முன்னம் உள்ளம் கவர்ந்த காதலனை பேதை நல்லாள் சந்திக்கும்படி நேரிடுகிறது. கணவன் இக்காட்சியைக் காண்கிறான். இருவரையும் மனம் விட்டுப் பேசுமாறு சொல்லி விட்டு அவன் வெளியில் புறப்பட்டுச் செல்கிறான் முடிவு பெற வேண்டிய பூர்த்தியடையாக் காதலின் கதைக்கு வாழ்வு அளிக்கப்படுகிறது. காதல் வாழ்கின்றது.


படப்பிடிப்பில் அன்றைய பகுதி முடிந்தது.


திருமாறன் அந்தத் தம்பதியை வீட்டுக்குக் கூட்டியனுப்பினான். வீடு வந்த மேகலை மிகவும் கல பலப்பாக இருந்தாள். ஆனால் மாமல்லனோ முகத்தில் களையின்றிக் காணப்பட்டான். படப்பிடிப்பில், கணவன் காத்திரம் ஏற்ற நடிகர் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னுமும் நினைவில் நெரித்துக் கொண்டிருந்தன.