பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i41


மேகலை நின்று கொண்டிருந்தாள். கையில் காப்பி, கை விரல்களில் அஞ்சலின் முத்திரை, விரல் நகங்கள் அணைத்திருந்த செந்நிறத்தில் புதியதொரு பாவனை


இட்ட மூன்று முடிச்சுக்களுக்குப் பாத்தியத்தை பூண்டவன் மாமல்லன் அல்லவா :- அவன் அவளை நோக்கினான், ஏந்திய மூன்று முடிச்சுக்களுக்கு உரியவள் ஆயிற்றே மேகலை ? - அவள் தன் கணவன் உருவத்தை அலங்க மலங்கப் பார்த்தாள்.


நஞ்சைக் குடித்த மாதிரி மாமல்லனுக்கு நெஞ்சு வலித்தது, விடியாத இராப் பொழுதை எட்டி உதைத்தது விடிந்து கொண்டிருந்த உதயத்தின் மலர்ச்சியை வரவேற்றுக் கொண்டிருக்கும் போது, அவன் கண்ட அந்தக் கன வை- அந்தக் கனவு எழுதிச் சித்தரித்திருந்த மேகலை - குலோத்துங்கன் இணையை- அந்த இனையைத் தங்கியவாறு கிடந்த பஞ்சனைப் பட்டு மெத்தையை அவன் எண்ணினான், யார் - மாமல்லன் எண்ணினான். கண்ட இடத்தில் கிடைத்த புல்லை விழுங்கும் பசு, ஓய்வு கண்ட நிழலில், புசித்ததை தொண்டைக்குக் கொணர்ந்து அசை போடுமாமே, அப்படித்தான் மாமல்லனின் நிலையும் நினைவும் இருந்தனவோ ?


ஏங்கிய உள்ளம் நீதி மன்றமாகி, உறங்காத மனச் சான்று நீதிபதியாகி, தவறு சுமந்த தையல் மேகலை கூண்டுக் கைதியாகி புதிய உலகம் சமைந்தது. விசித்திரம் நிறைந்த காட்சியொன்று மாமல்லனுள் ஏடு விரிந்தது விந்தையை கருக்கொண்ட பேதைமைச் சிரிப்பின் அலைகள் நொந்த மாமல்லனின் சிந்தையைப் பலி பீடமாக்கிக் கொண்டன. பலி பீடமா ? இல்லை, கொலு பீடமா ? . குலோத்துங்கன் ஏன் சிரித்தான் ? தொலையட்டும், அது அவனுடன் கூடப் பிறந்த வியாதி ! ஏன் அவன் இங்கே வந்தான் ? -