பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$60


மாமல்லனின் ஈரல் கலங்கிற்று. காற்றடைத்த இதயப்பை சுருங்கியது எல்லாவற்றையும் இருந்து இருந்த படியே வைத்துவிட்டான். குலோத்துங்கனின் உடமை யான பிரயாணப்பை களங்கம் காட்டாமல் சிவனே.” யென்றிருந்தது.


மாமல்லனும், மேகலையும் எதிரும்புதிருமாக அமைந்தார்கள். கனவனின் இமை நுனியில் நீர் மின்னுவதைக் கண்டதும், மேகலைக்கு உயிர்த் துடிப்பு துறந்து செல்வதைப் போலப்பட்டது. இருதய பாகத்தில் உறைந்திருக்கும் உயிரை-ஈருடலும் ஒருயிரான அந்த உயிருக்கு வாரிசாக கண் வளர்ந்து கொண்டிருந்த முகம் அறியாச் சிசுவை-எண்ணினாள், மணப்பந்தர் தொட்டுப் பூட்டிய வாழ்க்கை முத்திரைச் சீட்டான அந்த மங்கல நாணை எண்ணினாள், உருப் பொருளும் உருத் தெரியா உயிரும் அவளுக்குத் தன் நினைவை முடுக்கி விட்ட தருணத்திலே, கொண்டவனின் கோல முகத்துச் சோகம், கைகொடுத்தவளிடம் கண்ணிரைக் காட்டியது.


மேகலை, நீ ஏன் கலங்குகிறாய் ?”


  • உங்கள் கண்களில் கண்ணிரைக் கண்டால், என்னிடமும் கண்ணிர் சேருவது இயல்பு தானே, அத்தான்?


‘நீ அழக்கூடாது, மேகலை !”


அப்படியென்றால், நீங்கள் சிரியுங்கள் !’


-


‘எனக்குச் சிரிப்பு வரமாட்டேன் என்கிறதே, மாமன் மகளே !’


‘அதனால்தான் எனக்கு விழிக் கலக்கம் ஏற்படுகிறது. அத்தை மகனே !”


“என்னை இப்போது என்ன செய்யச் சொல்கிறாய் நீ?"