பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ió3


‘குற்றம் என்னிடமும் அண்டியிருந்தால், அதற்கு நான் கட்டாயம் தண்டனை பெறக் காத்திருக்கிறேன் , அத்தான், என் வயிற்றுக் கனியை முன் வைத்துச் செய்யும்


சத்தியம் இது’


மேகவை ‘’


“சரி, கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள், வழக்கு உரைகாதை இத்துடன் நிற்கட்டும். வாருங்கள். மனையறம் படுத்த கதை ஆரம்பமாகட்டும்!” -


மாமல்லன் இமைகளை விலக்கி விலக்கி மூடினான் வீரக் கண்ணகியின் வடிவம் சாந்தியுடன் திகழ்வதைப் பார்த்தான். குழப்பத்தை இருந்தவிடந் தெரியாமல் மறைத்தது அவளது அந்த இன்ப ஸ்பரிசம். தொட்டவிரல் களில் மணம் நின்றது, பட்ட இடத்தில் தேன்துளி இருந்தது ஜாதி மல்லியின் கற்புமணம் அவன் மண்டையில் கிறக்கத்தை வளர்த்தது.


ஆடும் பதுமையென மேகலை ஆட்டுவிக்கப்பட்டாள் : பாவம் !


விட்டு விலகிய பள்ளிப் பாடத்தைக் கூட்டிவைத்து எண்ணிப் பார்த்தான் மாமல்லன், அவன் நெட்டுயிர்ப்புக் கொண்டான். வீறு கொண்டு வழக்காடிய மேகலையின் துடிப்புப் பேச்சு குரல் கொடுத்தது அச்சம் அப்பிய முகத்திலே தென்பட்ட அவளது அபலைத்தன்மை புலனானது, ஐம்புலன்கள் தாம் இழந்த அறிவை மீட்டுக் கொண்டதெனச் சாற்றின முகத்தைத் துடைத்துக் கொண்டு மெத்தையில் சாய்ந்தபடி, குலோத்துங்கனின் பையை நோக்கினாள் அவன். சடுதியுடன் எழுந்து விரைந் தான் அவ்விடத்தை நாடினான். பை இருந்தது, ஆனால் முன் நாள் இரவு அவன் மனத்தைக் கெடுத்த மூன்று பொருள்கள் காணப்படவில்லை. நேற்று விளைவிக்கப்பட்ட