பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155


பரப்பில் பரப்பிவிட்டு, காலைப் பலகாரத்தில் கருத்து செலுத்தினான் அவன், காப்பியை அருந்தியதும், குலோத் துங்கனின் நினைவையும் சேர்த்துத் தொண்டைக்குள் திணித் தான். குலோத்துங்கனின் நினைவு அவனுடைய ரகசியப் பை”யை அழுத்திவிட்டது. அத்தனை பணமும் ஏது ? டைரியில் என்ன எழுதப்பட்டு இருக்கும் ? புகைப்படங்கள் என்னென்ன ? . ஆமாம், அந்தப் பை எங்கே மேகலைக்கு சர்வ நிச்சயமாகத் ស្វ៊ែពឹងអស្ច្យ இருக்கமாட்டாது,


கேட்கலாமா ? என்று மூளையைக் குழப்பினான்.


அதற்குள் நிகழ்ந்தது ;


“அத்தான், என் தோழிக்கு விருந்து வைத்தோ மில்லையா, அப்போது உங்களைப் பத்தி ரொம்பவும் உயர் வாகச் சொன்னாள். திருச்சியில் படிச்சுக்கிட்டிருக்கையிலே உங்களோடு சேர்ந்து நடிச்சாளாமே? நான் இருந்தப் போத்தான் நீங்க அவளோடு சரியாகப் பேசலையாம், மற்ற நேரத்திலே செளஜன்யமாப் பழகினிங்களாம். மாதவி சொன்னாள், உங்க நண்பர் கல்யாணத்தன்னிக்குக் கூட அவள் குழந்தை உங்ககிட்டே எவ்வளவு ஒட்டுதலாயிருந் துச்சு, சின்ன வயசிலே பழகுகிறதினாலே உண்டாகிற சினேகிதத்தின் மகிமையே அலாதிதான், இல்லீங்களா ?” என்று மென்னகை பயின்றாள் மேகலை.


இனம் புரியாத புதிய சலனம் எழுந்தது. பூசி மெழுகுவது மாதிரிதான் அவனால் சிரிக்க முடிந்தது. இந்தச் சிரிப்பை எவ்வகையில் ஒதுக்கவேண்டும்? திரிபுரத்தைச் சாம்பலாக்கிய இனமா ? ஊஹாம் !


  • கண்டதும் பொய் கேட்டதும் பொய் , தீரவிசாரித் தறிவதே மெய் !’ -


மனித மனத்துள் உறைந்த தெய்வ மனம் விழித்தது, விளித்தது : -