பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#71


மாமல்லனின் பேச்சு முடிந்தது. கண்ணிருக்குப் பின்னணியாக மேகலைக்குரிய எழிற் சித்திரம் தோன்றியது.


‘உன்னை நம்பாமல் இந்த உலகத்திலே வேறே யாரை நான் நம்புவேன், மேகலை ? என்று மொழிந்தவன் அவள் அருகே அயர்ந்த தூக்கத்தில் கட்டுப்பட்டுக் கிடந்தான். பாவம், அத்தானுக்கு எம்மேலே உள்ளுர துளியாச்சும் கோபம் இருக்கத்தான் இருக்கும். நான் என்ன செய்யட்டும். இரண்டுங்கெட்ட நி ைல யி ேல என்னாலே அவர் இஷ்டத்துக்கு தினமும் எப்படி தலையசைக்க முடியும் ? மங்களாம்பிகைத்தாயே இந்த மூன்று மாசமாகத்தான் நான் பழைய மேகலையாகியிருக்கிறேள் !’ என்று எண்ணச் சரம் தொடுத்தாள்.


“என் வாழ்வின் நிலையே நீங்கள்தானே, அத்தான்?


திருமணத்துக்கு முன் அத்தான் சொன்ன அதே சொற் களை அவள் உதடுகள் இப்பொழுதும் உச்சரித்தன . அவளது உயிர்நிலையில் அமைதி கனிந்தது. மனத்தில் கண்ணிக் கசிந்தது. தோன்றிய அமைதியைத் தட்டிப் பறிக்க, நடந்த நிகழ்ச்சிகள் சில அவள் மனக்கண்முன் நாட் குறிப்புப் புத்தகமாயின. அவற்றை அவள் ஒரு பொருட் டெனக் கருதவில்லை. நட்ட நடு இரவில் தொட்ட தூக்கத்தையும் எட்டி விலகிடப் பணித்தாள், மாடியறையி லிருந்த உக்கிராண அறையை நாடிச் சேன்றாள். குலோத்துங்கனின் பிரயாணப் பையை எடுத்தாள்? பன்னெடு நாட்களாகத் தனியறையில் அடைப்பட்டுக் கிடந்த காரணத்தினால், பையின் மேற்பரப்பு முழுவதிலும் துரசியும் துப்பட்டையும் அப்பியிருந்தன. சிலந்திவலை ஒன்று காணப்பட்டது, அவ்வலையினுள் தானே சிக்கிக் கொள்ளப் பக்குவப்பட்ட, அல்லது துணிவு மேற்கொண்ட மனம் அவளுக்குக் கைகொடுத்தது. பாம்பின் வாய்க்குள் கைவிட்டாற் போன்று ஒரு சமயம் மாமல்லன் தவிக்க வில்லையா? அவன் அன்றைக்குக் கண்ட ரூபாய்க் கற்றை