பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#76


என்னருகில் அமர்ந்திருந்தாளே ! ஆஹா !”


ஆ மாமல்லனா இப்படி என்னைச் சாகடிக்கத் துணிந்தார் ? விஷம் கலக்கப்படவில்லையெனில், அந்தப் பூனை அன்றிரவு அந்த பாலைப் பருகின சடுதியில் ஏன் மாண்டது . ஏன் மாமல்லன் என் உயிரைப் போக்க வேண்டும?. செயல் முறையில் மேகலையிடம் தகாத விதமாக ஒருமுறை கூட நடந்ததில்லையே? ‘


“ஐயோ, தெய்வமே !’ மேகலை அலறினாள். பயம் மண்டியிருந்த பேரமைதியைத் தூக்கியடிக்கும் வண்ணம், அச்சம் தந்தது அவளது கூப்பாட்டொலி. வயிற்றின் பாரத்தைப் பார்க்கிலும் தலைப்பாரம் அதிகமாய்க் கனத்ததை உணர்ந்த ஸ் தலை முடியைப் பைத்தியக்காரி மாதிரி பிய்த்தெடுத்தாள், சேலைத் தலைப்பு சரிந்ததைக் காணவில்லை. அருகில் தட்டுப்பட்ட தீப்பெட்டியை எடுத்தாள். தீக்குச்சியை உரசினாள். தீ கண் திறந்தது எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சாம்பலாக்கக் குனிந்தாள். ஏந்திய தீயை வாய் ஊதிவிட்டது.


விரக்தியும் வேதனையும் நீள் மூச்சும் சங்கமித்துப் பிறப்பித்த நகைப்பொலியில் இந்தக் குரல் கலந்தது. * அயோத்தி ராமனுக்குச் சொந்தமான சீதாப் பிராட்டியார் தீக்குளி நடத்திய மாண்புமிக்க நிகழ்ச்சியைச் சொல்லும் கதை அது. அதை வைத்து விடு. மேகலை!’


மறுமுறையும் தீப்பெட்டி அவள் முன் வந்தது எடுத்துப் பற்ற வைத்தாள். சேலைத் தலைப்பை வரிந்து கட்டிக் கொண்டாள். மண்ணெண்ணைய்ச் சீசா காலி யானது. சேலை நனைந்தது. தீ எறியத் தலைப்பட்டது.


மேகலை 1 மேகலை 1.


மாமல்லன், கோசலை அம்மாள், சிந்தாமணி மூவரும் ஓடி வந்தார்கள்.