பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175கூட பாவமென்கிறார்கள். மேகலை, நீ ஏன் என்னை பைத்தியமாக்குகிறாய் ? விட்டகுறை தொட்டகுறையா ? ஆண்டவனே, என்னை மன்னித்துவிடு’


‘என்னிடம் அத்யந்தமான பாசமும் அன்பும் பூண்டிருக்கிற மாமல்லனின் துணைவி மேகலையின் கையால் அவள் பிறந்த மனையில் காப்பி வாங்கிக் குடித்தேன். இன்றைக்கு என் வாழ்விலே ஒரு திருநாள் போல, உனக்குக் கல்யாணப் பரிசு தர ஆசைப்படுகிறேன் உன் சங்கிலியைக் கொடு!” என்று மேகலையிடம் கேட்டு வாங்கி, அதை மாமல்லனிடம் பரிசளித்து விட்டேன். ஹஹ்ஹா!’


“பாவம், சிந்தாமணி தஞ்சாவூரில் உறவினரிடம் கடன் வாங்கி, என் சித்த பேதத்துக்குச் சிகிச்சை கொடுக்கச் செய்தாள். ஆனால், எனக்கு என்னவோ திரும்பத் திரும்ப மேகலையே கண்ணுக்குள்ளாக நின்று தவம் செய்து கிடப்பதைப் போன்று ஒரு உணர்ச்சி எழுகின்றது. கிடைக்கும் கரித்துண்டு கொண்டு குறுக்கிடும் சுவர்ப் பகுதிகளிலே கோடுகளைக் கிறுக்கி விளையாடுகிறேன். மேகலைதான் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உருக் காட்டுகிறாள். ஊண் இன்றி, உறக்கம் அழிந்து, உற்ற இடம் துறந்து பெற்றவளை இழந்து இப்படிச் சுற்றி யலைந்து ஊர்ப் பெயர்களைத் தெரிந்து கொள்ள நான் செய்த பாவம் தான் என்ன ?


“இளம் பருவத்தின் ஏற்றமிக்க நாட்களெல்லாம் வீணே கழிந்தன, எஞ்சிய தினங்களும் இவ்வாறே கழிய வேண்டுமா? பின், ஏன் திருமாறன் குறுக்கிட்டிருக்கிறார் என் கண்களில் பணத்தைக் காட்டி என் பைத்தியத்தை மிஞ்சச் செய்கிறாரே ? -


‘ஆஹா, நொந்த மனசுடன் மெரினா கடற்கரை வெளியில் கண் வளர்ந்தபோது, கனவில் மேகலை தோன்றி.