பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#80


சிந்தாமணியையும் குலோத்துங்கனையும் முதலிலே கண்டு பிடியுங்க. நமக்காக சிந்தாமணி அவள் அத்தானை ஏதாச்சும் விபரீதமான முடிவுக்கு உள்ளாக்கிடப் போகுது ‘ என்றாள்


படத் தயாரிப்பாளர் ராமசேகரன் அவர்களுடைய செல்வன் திருமாறன், சிந்தாமணி, குலோத்துங்கன் மூவரும் பின் தொடர, மாமல்லன் பிளிமத் காரிலிருந்து இறங் கினான். அவர்கள் மூவரையும் கூடத்தில் அமரச் செய்து விட்டு மாமல்லன் மாத்திரம் உள்ளே மேகலையிடம் சென்றான். மேகலை, அடையாற்றுக் கடற்கரையிலே குலோத்துங்கன் அலைந்து கொண்டிருந்ததைக் கண்டு திருமாறன்தான் அழைத்து வந்தாராம். சிந்தாமணி நேராக திருமாறனிடம் போய் அவர் பணத்தை வீசி, தன் கனவைப் பற்றிச் சொல்லி, அவர் மனசையும் மாறச் செய்திருக் கிறது. திருமாறன் இல்லையென்றால், குலோத்துக்கனை அது கட்டாயம் பழி வாங்கியிருக்கும் போலிருக்குது : என்றான்.


அத்தான், திருமாறன் அண்ணாவுக்கு அத்தையைக் காப்பி கொடுக்கச் சொல்லுங்க. நீங்க குலோத்துங்கனை யும் சிந்தாமணியையும் மாடிக்கு அழைத்து வாங்க !” என்றாள் மேகலை.


குலோத்துங்கன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். மாமல்லன் படபடத்த மனத்தோடு நின்றான் அருகில் சிந்தாமணி காணப்பட்டாள்.


மேகலை நிதானமாக நடந்து வந்து நின்றாள். காப்பி தம்ளரை சிரமப்பட்டுக் கையில் எடுத்து அதை குலோத்துங்கனிடம் கொடுத்தாள்.


‘காப்பி குடியுங்கள். குலோத்துங்கன் ‘