உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23



  • வாஸ்தவந்தான், அம்மா. நான் வேடிக்கையான பிள்ளைதான். இல்லையானால் என் மேகலை என்னை விட்டுப் பிரிக்கப்பட்டிருக்க முடியுமா?”


‘தம்பி, மாமல்லா இனி நீ மேகலையைப் பத்தி மனசிலே நினைக்கிறது கூட தப்பு!”


“அம்மா!’


“ஆமாப்பா!’


என்னம்மா, இப்படிப்பட்ட குண்டை தூக்கிப் போடு நீங்களே ?. மேகலை என் உயிர், உடல், உள்ளம் மூன்றிலேயும் நிரந்தரமாக குடியிருக்கிறபோது எப்படியம்மா அவளை என்னாலே மறக்கமுடியும் ?. அதை மட்டும் மறு படியும் நினைப்பூட்டாதீங்க. என்னை மறந்து ஒரு நாள் இல்லே, ஒரு வருஷம் வேணுமானாலும் உயிர் தரிசிச்சிருப் பேன். ஆனா என் மேகலையை மறந்து அரைக்கணங் கூட நான் உயிருடன் இருக்க மாட்டேன், இருக்க முடியாது, அம்மா !”


மெல்லிய இருமல் சத்தம் கீழிருந்து புறப்பட்டுப் படி தாண்டி மாடிக்கு வந்தது.


மாமல்லன் கண்களைத் துடைத்தான், மாடி வழியில் அவன் பார்வை போய் நின்றது. யாரும் வரக்காணோம். மீண்டும் இருமல் ஒலிதான் வந்தது. -


‘சிந்தாமணி அது ‘ என்று குறிப்புத் தந்தாள் கோசலை.


தொடர்பிழந்த பேச்சுக்குத் தொடர்பு தேடினான் அவன். பிறகு அவனையும் உணராமல் பெருமூச்சு வெளிக் கிளம்பியது. .