பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37எவ்வளவு நாளைக்குத்தான் கோசலை அம்மாளுடைய சோற்றுக்குக்கேடாக நான் இருக்கமுடியும்? இடம் பொருள் ஏவல்தப்பிப்போனால் எந்த அன்புக்கும் : அடைக்கும் தாழ் தன்னாலே உண்டாகிவிடு மென அப்பா சொல்வார்களே! பாசம் நிறைந்த அன்பைச் சொரிய ஒரு கோசலை அம்மாளும், பண்பு நிரம்பின அன்பைக்காட்ட ஒரு மாமல்லனும் எனக்குக் கிடைத்திருக்கிறார்களே. :- இந்த ஒரு பாக்கியம் என்றென்றும் நீடித்து நிற்குமென்று என்ன நிச்சயம் ? இந்த பாக்கியத்தை நீடிக்கவிட இந்தப் பழிகார உலகத்தான் ஒப்புமா ?


தபால் பெட்டியைக் கூப்பிட்டாள். அது வந்தது. ‘என்ன சேதி என்று கேட்டது. அவள் சேதியைச் சொன்னாள். ‘ஓ’ என்று முகங்காட்டி, ஏந்திழை நீ தட்டிய கடிதத்தை ஏந்தியவாறு பறந்தது பெட்டி


சிந்தாமணி திரும்பினாள். சந்துத் திருப்பத்தில் இருந்த சாயாக் கடையிலிருந்து கிராமபோன் பெட்டி பாடிக் கொண்டிருந்தது. திக்குத்தெரியாத காடாம், பாவம் தேடித்தேடி இளைத்தாளாம் ! யார், ராதையா யாரைத் தேடி இளைத்தாளாம் ? . கண்ணனைத்தானே !


அவள் கவனம் எங்கோ சென்றது. ஆனால் அவள் கவலை அங்கேயே தங்கியது. உடல் உள்ளவரையில் கடல் கொள்ளாக் கவலை என்பார்கள்.


அந்தி சந்திப்பொழுது. மாமல்லன் அலுவலகத் திலிருந்து திரும்பியபோது, சிந்தாமணி மாத்திரமே இருக்கக் கண்டான். அம்மா தெரிந்தவர்கள் வீட்டுக்குப் போயிருப் பதாகவும் அறிந்தான். உடம்பில் ஒட்டியிருந்த அலுவலகத் துர்சியைக் கழுவிச் சுத்தம் செய்தான். வகிடு எடுத்துத் தலை வாரினான். வீழ்தி இட்டான். பிரயாணப்பையில் துணி மணி சாமான்களை நிரப்பினான்.


“சிந்தாமணி, எனக்கு ஒரு உபகாரம் செய்யlங்களா? ராத்திரிச் சாப்பாடு தயாராகிக்கிட்டிருக்குமே ஆன