பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36


எல்லாம் தான் மாறிப்போச்சே ? கடவுளே கொஞ்சம் முந்தி நான் உன் கிட்டே வேண் டிக்கிட்ட அந்த வரத்தை யாச்சும் கொடு ஒரு அல்லிக்கொடிக்கு ஒரு நிலாவைக் காட்டு : அப்பனே !’ என்று நினைவு மலர்களைச் சரமாகத்


தொடுத்து மனப்பீடத்திற்குக் காணிக்கையாக்கினாள் அம்மணி,


வார்த்தெடுத்த தோன சகள் காய்ந்து கிடந்ததைக் கண்ட கோசலையம்மாள், மறுபடியும் தோசைக்குக் கல் வைத்தாள். சூடான தோசைக்கு ஒன்று இரண்டு என்று வரிசை எண் தொடுத்து சிந்தா மசையைச் சாப்பிடச் செய்தாள், இப்புறம்தான் அவள் நல்ல மூச்சுவிட்டாள்.


‘உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டிருக்கேன்’ என்று கண்ணிர் மல்க, உணர்ச்சிப்பெருக்குடன் கூறினாள் சிந்தாமணி,


கோசலை அம்மாள், சிரித்தாள். அவள் சிரிப்பின் உட்பொருளை ஊகித்தறிய சிந்தாமணிக்கு வயசு போ வில்லை. அல்லது, அவளுடைய தலையில் நரை எதுவும் ஒடவில்லை.


மாமல்லனுக்கு மத்தியானச் சாப்பாடு தயாரானது. வேலைக்காரி எடுத்துச் சென்றாள். கோசலை அம்மாளும் சிந்தாமணியும் பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டனர். மாமல்லனின் அன்னை சிறுபொழுது ஒய்வு கண்டாள். இதுதான் சமயமென்று, சிந்தாமணி தன் தோழி மாதவிக்கு தியாகராய நகருக்கு எழுதிய கடிதத்தைத் தபாலில் சேர்க்க எண்ணி வழி நடந்தாள். மாதவியின் பதில் நல்ல விதமாக அமைந்தால் நல்லது, அவள் மாதிரி எனக்கும் அன்னை கஸ்தூரிபாய் அனாதை இல்லத்தில் இடம் கிடைத்து விட்டால்தான் எனக்கும் நிம்மதியாயிருக்கும். கொஞ்சகாலம் பயிற்சி முடிந்தால், எப்படியும் ஆசிரியை வேலை கட்டாயம் கிடைக்கத்தான் கிடைக்கும் . ஆமாம்