பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42



சொல்லும் புத்தம் புதிய கட்டுக்கோப்பு அவளுடைய கண்கள் இரண்டிலும் சரிபாதியாக நிறைந்து காணப் பட்டது. பனி நிலவின் போதையும் போதமும் அவளின் உதடுகளுடன் ஒட்டுறவு கொண்டன. துண்ட மதியின் நுனிபோலமைந்த மூக்கின் இடது பகுதியில் மூன்றாம் பிறை வடிவமைந்த மூக்குத்தி அழகு காட்டியது. நிலவின் உருவமாக-நிலவின் ஒளியாக-நிலவின் நிலவாக அவள் ஊர்ந்தாள், மிதந்தாள், நின்றாள்.


“என்ன தம்பி அழுகிறீங்க ?” என்ற குரல் மாமல்லனது நினைவின் பிடரியைப் பிடித்துக் குலுக்கியது. அவன் குலுங்கினான். நுனிடோலமைந்த மூக்கின் இடது குனிந்த பார்வை, பிரிந்த பத்திரிகையில் சிதறிக்கிடந்த கண்ணிர் மணிகளைக் காட்டியது. நிமிர்ந்த பார்வை எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பெரியவரின் அனுதாபம் கனிந்த முகத்தைச் சுட்டியது.


‘அப்பா ஞாபகம் வந்தது ‘


“அப்பாவைப் பிரிந்த துக்கமா தம்பி ‘


“ஆமாங்க... இல்லீங்க ஐயா ... அப்பா என்னைப் பிரிந்த வருத்தம் !’


“அவருக்கு உன் பேரிலே வருத்தமா ?”


“ஆமா !”


  • என்ன காரணம் ??


‘அது எனக்கும் தெரியாது, அப்பாவுக்கும் தெரியாது!’


  • :శ్రీ (ఇ ? “


‘அந்தத் தர்மப் பிரபுக்குத் தான் அந்த ரகசியம் தெரியும் !”


“அப்படியா ?”


    • ih !”