பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ


‘காதலெனுந் தீவினிலே ராதே, ராதே! - அன்று கண்டெடுத்த பெண்மணியே ராதே, ராதே !’


கைலாயபதியைக் கொண்டவனாக ஏற்கக் கனவு கண்டாள் உமையவள். பரமசிவம் தவம் புரிய இமாலயத் திற்கு வந்தான். குற்றேவல் புரியத் தன் குலச்சுடரை அனுப்பினான் மலையரசன். தாரகனின் கொடுமைகளைத் தாளமாட்டாமல் தவித்த தேவர்களுக்குப் பிரமனின் ஆலோசனையொன்று கிடைத்தது. அதன்படி முக்கண்ண னுக்கும் இமயவல்லிக்கும் திருமணம் செய்து வைத்து விட்டால், அவர்கள் இருவருக்கும் பிறக்கும் பை நீதன் மூலம் தேவர்களுக்கு விடிவும் வாழ்வும் கிடைக்கும் என்ற உறுதி உருவானது. பணிவிடை செய்து வந்த தேவியின் பால் நாட்டம் உண்டாக்க எண்ணிய வசந்தன், தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு கணை தொடுத் தான், ஐயன்பால். அரவணிந்தோன் முக்கண் திறந்தான், பார்வதி தட்டுப்பட்டாள். தன் நிலையை உணர்நீதி பித்தன் காமன் மீது கடுங்கோபம் கொண்டு அவனை எரித்தான். மலை மடந்தை மனம் நொந்தாள். அழகினால் ஆண்டவனை அடைய முடியாதென்றும் தவமொன்றே தக்க வழியெனவும் உறுதி பூண்டாள். இடைப்பட்ட சோதனைகள் துடைக்கப்பட்டன. உமையவளின் கனவும் தவமும் பலித்தன. உலகத்தின் அன்னை அவள்.!


கண்ணின் கருமணிகள் நோவு எடுக்கும் பரியந்தம் மேகலை அந்தச் சித்திரத்தில் கண் நோக்கு செலுத்தி


அ4ை