பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5i


உதயப்பூ மடல் அவிழ்ந்து கொண்டிருந்தது.


வெள்ளாளத் தெருக்கோடியில் நடைப்பிணம் ஒன்று பையப்பைய நடை பயின்று வந்தது ஒய்யாரக் கொண்டை யின் பொலிவு அவன் உடைகளில் மின்னியது. துகள் துகளாகிப் போன மனக் கண்ணாடிச்சில் ஒவ்வொன்றும் அவனது உருவத்தை மாத்திரமல்ல, உள்ளத்தையும் பிரதி பலித்துக்காட்டியது, கண்ணாடித் துண்டங்கள் அனைத்தும் கோரஸ் பாடின. கூட்டாக ஒலித்த குரலைப் பிரிவினை செய்து பார்த்தால், அல்லது கேட்டால், மேகலை’ என்ற அழைப்பு தெரியும், அல்லது கேட்கும் !


ஆம், அவன் மாமல்லன்தான் !


எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சோமசுந்தரத்தின் மனை இருந்தது. ஒடிப் பிடிக்க வேண்டியவன் அவன் அதற்கு உரிமையும் அவனுக்கு இருந்தது. அந்த உரிமை இப்போது ‘காலாவதி"யான பாத்திரம். அனுமதியின்றி உள்ளே பிரவேசிக்கக் கூடாது, என்ற எச்சரிக்கை அட்டை தொங்க விடப்பட்டிருக்குமென்று கூட அவன் யோசித்தான். சென்னையிலிருந்து புறப்பட்டவன் அரியலூர் மண்ணை மிதிக்குமட்டும் எவ்வளவோ மனத்தெம்புடன் இருந்தான், விதியின் எழுத்துடன் தன் தலையெழுத்தையும் மாற்றிக் கொள்ளும் அளவுக்குப் பக்குவப்பட்டிருந்தது அவன் நெஞ்சம். காதற் பெண்ணின் கடைக்கண் பணியிலே காற்றிலேறி விண்ணையும் சாடும் திறன் அவனிடம் உருப் பெற்றது. ‘நானும் என் மேகலையும் மனம் ஒத்துப்போன பிறகு, ஒப்புதல் சொல்லாத ஜாதகங்களைப் பற்றி யாருக்கு அக்கரையாம்...’ என்னுடைய முறைமைப் பெண் என்னைச் சாரவேண்டியவள்தானே ? பின், ஏன் ஜாதகம் பார்க்கவேண்டும் ! காதும் காதும் வைத்தாற் போல திருமண ஏற்பாடுகளைக் கூடச் செய்துவிட்டாரே Lorrtorr ? பணம் அவருடைய வாயைக் கட்டிவிட்டது போலவே அவர் உள்ளத்தையும் கட்டிவிட்டதோ ?