பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75



காதல், எங்கள் வாழ்வுக்கு வசந்தமண்டபம் அமைக்குமா?... ஆம், கட்டாயம் என் கனவு நிறை:ேறிவிடும். பின்னர் ஏதோ ஒரு நிறைவின்மை நெஞ்சத்தை ஏன் முற்றுகை யிட்டிருக்கிறது ?


‘அம்மாவின் ஆசி பெற்று எனக்குரிய இல்லத்தரசியை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டிய நான், பெற்ற தாயிடம்கூடச் செய்தியைத் தெரிவிக்காமல், மேகலையுடன் பட்டனத்துக்கு இன்றிரவு ரயிலேறிப்போகிறேன் ம்!. வரும் விதி இராத்தங்காது என்பார்களே அம்மா . என்னை, எங்களைத் தொடரவிருக்கும் விதி ஒரு வேளை எங்களுடனேயே பயணப்பட்டுவிடுமே ? மேகலையைக் காணாத விவரம் கே ட் டு பெரிய பட்டாளமே படையெடுத்து வந்துவிட்டால் என்ன செய்வது ? இந்தத் தமிழ்ச் சமுதாயம் ஆண் இன்த்துக்கு வகுத்துக் கொடுத் திருக்கும் சட்டதிட்டங்களைத் தளர்த்திக் கொள்ள ஏது உண்டு. ஆனால் பெண் இனம் அப்படியல்லவே? ....பெண் களுக்கென்று எழுதப்பட்ட கட்டுப்பாடுகள் அவர்களது வாழ்க்கையாகவே அமைந்து விடுகின்றனவே ! . மேகலை என்னுடன் புறப்பட்டுச் சென்றதைக் கேள்விப்பட்டதும் ஊரார் శ్రీ శ ఫ: డF நிந்திக்கமாட்டார்களா ? தமிழ்ப் பண்பைச் சாட்சிக்கு அழைத்துக் கொண்டு ஏசிப் பேசுவார் களே ? ஐயோ, கடவுளே !’


குப்பைக் கூடையில் வேண்டாதி கூனங்கள் மட்டும் தான் தஞ்சம் புகுகின்றனவா ? முக்கியமான காகிதங்கள் கூட சமய சந்தர்ப்பங்களில் இடம்மாறிப் புகல் அடைவது இல்லையா ? இப்படிப்பட்ட வரம்பில் பேனாவை அழுத் தினால், மனம் ஒரு குப்பைக் கூடை என்றுதான் விளம்பி நிற்கும். கூடையில் குவிந்திருக்கும் குப்பைகளை மனிதனே தேடிப் பார்க்கையில், மனசாட்சி பழைய சம்பவங்களைத் தூண்டித் துருவி அலசி ஆராய்வதில் அதிசயம் இல்லை தானே ?