பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


73


சாப்பிட்டுத் திரும்பியபோது, சிந்தாமணி மயங்கிக் கிடந்ததை அறிந்து திடுக்கிட்டான் மாமல்லன். மறு பதினைந்தாவது நிமிஷத்தில் அவள் கண்களைத் திறந்தாள். கோசலை அம்மாள் அண்ணிர்த் துளிகளைத் துடைத்துக்


கொண்டாள் மனச்சான்துக்குத் திரையிடுகிறான் இதயமிழந்த மனிதன், விந்தை மிக உலகத்துக்குப் படுதா போடுகிறது இதயமுள்ள இயற்கை.


இரண்டாவது ஆட்டத்துக்குப் படம் பார்க்கப் போவதாக அன்னையிடம் பொய் சொல்லி விட்டு மாமல்லன் ரெயிலடியை நோக்கி நடந்தான். அந்தத் தெருவைத் த வண்டிய போது, பெரியவர் ரங்கரத்தினம் வேகமாக வந்து நின்றார்.


‘மாமல்லன் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்


படக் கம்பெனிக்காரர். உங்கள் மாமாவிடம் கோபித்துக் கொண்டு சற்று முன் பட்டணத்துக்குப் புறப்பட்டுப் போய் விட்டாராம். உங்கள் மாமாவுக்கு ஏராளமாகக் கடன் இருக்கிறதாம், இந்த ரகசியம் அவருக்குத் தெரிந்து விட்டதாம். மேகலை மூலம் எனக்கு விஷயம் தெரிந்தது. உங்கள் அம்மாவிடம் இந்த நடப்பைச் சொல்வதற்கு உங்கள் மாமா சோமசுந்தரம் புறப்பட்டுக் கொண்டிருக் கிறாராம் . இனி உங்கள் இருவர் கனவும் காதலும் வெற்றியடைந்து விடும் !” என்று விளக்கினார்.


நிலவினில் வள்ளியை மருவி, அவளாகவே வந்திடக் கனவு கண்டு வெற்றி பெற்ற வேல் முருகனின் நினைவு எழுந்தது : மல்லனுக்கு.


சோமசுந்தரம் அவர்களின் வீட்டில் அன்றைக்குக் கொட்டு மேளம் முழங்கியது நிச்சயிக்கப்பட்ட அதே சுப முகூர்த்த வேளையில் மேகலையின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் மாமல்லன் !