பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84“அப்படியெல்லாம் என்னைத் தூக்கிவைச்சுப் பேசா தீங்க, கோசலை, உண்மையை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லவேனுமானால், நாங்க தான் உங்களை மறக்க முடியாது பட்டணத்துப் படக் கம்பெனிக்காரன் பறிச்சுக் கிட்ட மானம் மரியாதையை நீங்கதானே திருப்பித் தந்திங்க, கோசலை ? உங்க குடும்பத்தை நானோ மேகலையோ இந்த ஜன்மித்திலே மறக்கவே முடியாது !”


உணர்ச்சிச் சுழிப்பின் காரணமாக சொற்கள் தெளி விழந்து ஒலித்தன.


புருஷனைக் கண்டதும் எ ழு ந் து சற்றே ஒதுங்கிய மரகதவல்லி உடனே தன் நாத்தனார் கோசலையின் பக்கத்தில் போய் நின்றாள். பெண்டிர் இருவரையும் அடுத் தடுத்துப்பார்த்தார் சோமசுந்தரம். பிறகு அவர் தம் தங்கை கோசலையை அண்டி, தங்கச்சி நீங்க இரண்டு பேரும் பேசிக்கிட்டிருந்தது என் காதுக்குக் கேட்டுது’ என்று சொல்லி அத்துடன் பேச்சைத் துண்டித்து விட்டார்.


கோசலை அம்மாளின் நினைவுகள் க ட ந் த சில நாட்களைத் தாண்டின.


மேகலை தன் மகனுக்குக் கிடைக்கும் லபிதம் இல்லை யென்னும் உண்மையை ஜாதகம் அறிவித்த தருணத்திலேயே கோசலை அம்மாள் சென்னைக்குப் புறப்பட்டுப் போக வேண்டுமென்று முடிவு செய்தாள். ம று க ைம் சென்னைக்குப் போவதற்குப் பதிலாக திருச்சிக்கே போய் விடலாமோ என்ற ஒரு நினைவும் நெஞ்சில் நெளிந்தது. சரி பார்க்கலாம் ; எதற்கும் சிந்தாமணிப் பெண்ணைக் கலந்து முடிவு செய்துகொண்டால் போகிறது.’ என்பதாக