பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 117 சொல்லிக் கொள்ளுங்களே!-அதை விட்டுவிட்டு என்னுடைய பெண்மையைப் பலிகொள்ள விரும்பி என்னிடம் ஏன் உங்களுடைய காமவெறி பிடித்த கோரக் கரங்களை நீட்டுகிறீர்கள்?-கணவரிடம் பெறத் தக்க இன்பத்தை கான் பெருவிட்டால் என்ன, அதற் காகக் கடைத் தெருவில் நின்று உங்களிடம் பேரம் பேசவேண்டுமா?-போய் வாருங்கள் ஐயா, போய் வாருங்கள்! என் கணவர் எப்படி எந்தப் பெண்ணுக் கும் கணவராக இருக்க லாயக்கற்றவராகப் போய் விட்டாரோ அதே மாதிரி கானும் எந்த ஆணுக்கும் மனைவியாக இருக்க லாயக்கற்றவளாகி விட்டேன் என்று நினைத்துக்கொண்டு போய் வாருங்கள் ஐயா, போய் வாருங்கள்!”

அவசரப்படாதே லலிதா ஆற அமர யோசித்துப் பார்!-இதில் என்ன இழிவு இருக்கிறது?-செய்வதைச் செய்துவிட்டு எல்லாம் அன்பின் விளைவு என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டால் போதும், கம்மைப் போற்றக் கூடிய ஆன்றேர்களும் வாழ்த்தக்கூடிய சான்ருேர்களும் இருக்கவே இருக்கிரு.ர்கள்? எதற்காக நாம் அஞ்சவேண்டும்? அஞ்சி ஏன் ஆசையைப் பண் பென் னும் குழிவெட்டிப் புதைக்க வேண்டும்?-அன்று உன் கணவர் கூடச் சொல்லவில்லையா, உள்ளத்தின் எண்ணங்களை இஷ்டப்படியெல்லாம் மாற்றிக்கொள்ள முடியாது என்று; அதனுல்தான் இவ்வளவு தூரம் உன்னை நான் வற்புறுத்துகிறேன்!”
  • அப்படிப்பட்ட வருடைய உள்ளத்தில் கேற்று வரை அன்புள்ள மனைவியாயிருந்த என்னை அவர் மட்டும் எப்படி அன்புள்ள குழந்தை'யாக மாற்றிக் கொண்டாராம்?’’

அ.-8