பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 139 அவ்வளவுதான், எவன் எப்படிப் போல்ை உனக்கு என்னடி?” என்று அவள் முதுகில் பளார்’ என்று அறைந்து அவளை இழுத்துக் கொண்டு அப்பால் சென்ருள் அத்தை! எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னைக் கண்ட தும் ஏன் இப்படி எரிக் து விழுகிறீர்கள்? அப்படி என்ன தான் செய்துவிட்டேன்? வந்தவளை வா!' என்று கூட அழைக்க மாட்டேன் என்கிறீர்கள்?' என்று மனம் உடைந்து கேட்டு விட்டேன். கைாங்கள் யாரம்மா உன் இன வா' என்று அழைக்க போ!' என்று விரட்ட? இனிமேல் நீதானே இந்த வீட்டுக்கு எஜமானி? உன்னை யார் என்ன கேட்க முடியும்?' என்ருள் அத்தை. அவளுடைய பேச்சை அதற்குமேல் என்னுல் கேட்க முடியவில்லை; கேட்கப் பொறுமையும் என்னிடம் இல்லை.

இதென்ன பேச்சு? தயவுசெய்து இப்படியெல் லாம் இனிமேல் பேசாதீர்கள்?’ என்று மட்டும் சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றேன். பெட்டிப் படுக்கையை எடுத்துக் கொண்டு என்னைத் தொடர்ந்து வந்தான் சாம்பு.
பாவி எங்கிருந்தோ வந்தான். இந்தக் குடும்பத் தைக் குலைக்க' என்று அவனுக்குப் பின்னல் அத்தை கடுகடுத்தது என் காதில் விழுந்தது.

யார் அந்தப் பாவி? சாம்புவா அந்தப் பாவி? ஆம்; அவன்தான் அங்கப் பாவி என்று அடுத்த கிமிஷமே எனக்குத் தெரிந்துவிட்டது. குளிப்பதற்