பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விந்தன் 23 நான் திடுக்கிட்டேன்; எது உண்மை? உங்களைக் கல்யாணம் செய்துகொள்ளாமல் உங்களுடைய பணத்தை கான் கல்யாணம் செய்துகொண்டதா உண்மை' என்று திருப்பிக் கேட்டேன்.

ஆம்' என்ருர் அவர், அழுத்தக் திருத்தமாக,
அப்படியால்ை எ ன் னு ைடய அன்பில் உங்களுக்கு கம்பிக்கையில்லையா?”
கிடையாது; கிடையவே கிடையாது!”

அவ்வளவுதான்; ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்து விட்டது எனக்கு. அட, பாவி!' என்று கத்திய வண்ணம் அவருடைய கன்னத்தில் ஒங்கி அறைந்து விட்டேன்! அடிபட்ட இடத்தைத் தடவிக் கொடுத்தபடி அவர் சிரித்தார்; விழுந்து விழுந்து சிரித்தார். இப்போது தான் உன்னிடம் எனக்கு கம்பிக்கை பிறந்தது; இப்போதுதான் உன்னிடம் எனக்கு கம்பிக்கை பிறந்தது!’ என்று சொல்லிச் சொல்லி, விழுந்து விழுந்து சிரித்தார்! எனக்கு ஒன்றும் புரியவில்லை. பரக்கப் பரக்கப் பார்த்தேன்; பயந்து பயந்து விழித்தேன்.

அனைத்துக்கொள், லலிதா! அடித்த கையால் என்னை அன்புடன் அனைத்துக்கொள், லலிதா' என்ருர் அவர், காத் தழுதழுக்க,

கரீங்கள்...... நீங்கள்...... 秀雯 அதற்கு மேல் என்னல் ஒன்றும் பேச முடியவில்ல்ை, தடுமாறினேன்.