பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 59 நானும் உன் காதலனைப்போல் உனக்குப் பக்கத்தில் 'ஜம்'மென்று உட்கார்ந்திருப்பேன். இன்று போய் வாருங்கள்' என்று செல்வது போல் அன்று உன் குல் சொல்லியிருக்க முடியாது; போவதாயிருந்தால் நீங்கள் தான் எழுந்து போயிருக்கவேண்டும், இல்லையா?”

ஆச்சரியம், கல்யாணத்திற்குப் பிறகுகூட இந்தக் காதல் பைத்தியம் தெளியாமலிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்'

இல்லை லலிதா, இல்லை. இது புதுமை; புதுமை யிலும் புதுமை. எங்களைப் போன்றவர்களுக்குக் கன்னியைக் காதலிப்பதைக் காட்டிலும் கல்யாண மானவ8ளக் காதலிப்பதில்தான் அந்தப் புதுமை இருக்கிறதாக்கும்?' க இருக்கலாம்: உங்களைப்போன்ற கையாலாகாத வர்களுக்குக் கன்னியைக் காதலிப்பதைக் காட்டிலும் கல்யாணமானவ8ளக் காதலிப்பதில் அந்தப் புதுமை இருக்கலாம்!” ஏன் இருக்காது? கையாலாகாதவர்களிடம் காசுக் குத்தான் பஞ்சம்; காதலுக்குக் கூடவா பஞ்சம்!”

புத்திக்கும் பஞ்சமாயிருப்பதுதான் எனக்குப் புரியாத புதிராயிருக்கிறது!”
புதிராவது! புரட்சி லலிதா, புரட்சி. அந்தப் புரட்சியும் எதில் இருக்கிறது, தெரியுமா? யாராவது ஓர் ஏழைப் பெண்ணை-அதாவது, காசால் வாழ முடியாத ஏழைப் பெண்ணே-காதலால் அவளையும் வாழ வைக்க முயன்று, தன்னையும் வாழ வைத்துக் கொள்ள முயல்வதில் இல்ல்ை, காசால் வாழமுடிந்த