பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அன்பு அலறுகிறது வில்லை; எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை!” என்ருர் அவர், இஞ்சிதின்ற குரங்கைப் போல.

ஏனும்?” என்று நான் போனுற் போகிறதென்று கேட்டு வைத்தேன்.

தன்னை மறந்த கி2லயில் இருக்கும்போதுதானே உன்னை என்னுல் காதலிக்க முடிகிறது?” அட, பாவி; இன்னுமா நீ என்னைக் காதலிக் கிருய்?” என்ன லலிதா, இப்படிக் கேட்டுவிட்டாயே? இல்லாவிட்டால் இத்தனை நாட்கள் என் இஷ்டம்போல் வந்து இத்தனை காட்கள் என் இஷ்டம்போல் உனக்குப் பக்கத்தில உட்கார்ந்து, இத்தனை நாட்கள் என் இஷ்டம்போல் உன் ஸ்பரிச சுகத்தில் மகிழ்ந்து, இத்தனை நாட்கள் என் இஷ்டம்போல் எழுந்து செல்ல எனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?’’ சந்தேகமென்ன, பைத்தியம்தான்! இல்லா விட்டால் கல்யாணத்தன்று இரவு, என் லலிதாவைக் காளுேமே, என் லலிதாவைக் காணுேமே!’ என்று நீ கத்தித் தொலைத்து என் மானத்தை வாங்கி யிருப்பாயா?” காருக்குப் பின்னுல்தான் நீ தொத்திக் கொண்டு வந்து என்ஆனயும் உன் இனப் போல் பைத்தியமாக கடிக்க வைத்திருப்பாயா?” 'ஆஹா அன்று மட்டும் அந்தப் பாழாய்ப்போன போலீஸ்காரன் என்னைப் பார்க்காமல் இருந்திருந்தால் ஆஸ்பத்திரியில் அடியேனுக்குக் கிடைத்த சந்தர்ப்பம் சர்க்கஸிலும் கிடைத்திருக்கும். கானும் உன் கணவரைப்போல ஒரு டிக்கட் வாங்கியிருப்பேன்,