பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அன்பு அலறுகிறது. எங்கள் கலாசாலை வாழ்க்கையின்போது, ஒருநாள் அவளும் நானும் சாலை வழியே சென்றுகொண் டிருந்தோம். எங்களுக்கு முன்னுல் சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவர் சாலையோரத்தில் கிடந்த தேய்ந்த லாடம், கல், முள், கண்ணுடித் துண்டுகள் ஆகியவற்றையெல்லாம் கர்ம சிரத்தை யுடன் பொறுக்கி எடுத்துக்கொண்டே சென்ருர், அப்போது வாழைப்பழத் தோல் ஒன்று வக்து அவருக்கு முன்னுல் விழுந்தது; அதையும் எடுத்துக் கொண்டு மேலே செலலவில்லை. கின்ருர், கின்று. பார்த்தார். மதிற்கூவரின் மேல் உட்கார்ந்து வாழைப் பழம் தின்று கொண்டிருந்த புண்ணியாத்மா செய் யும் பரோபகாரம் அது என்று தெரிநதது. கதம்பி! தோட்டக்தான் பின்னலிருக்கிறதே, தோலை அதில் விட்டெறியலாமே?' என்ருர் பெரியவர். 6. அது என் இஷ்டம்!” என்ருன் சிறியவன் வயதில மட்டுமல்ல; புத்தியிலும்தான்! என்னமோ, உன்னுடைய இஷ்டம் உன் இனக் கஷ்டத்தில் கொண்டுவந்து விடாமல் இருந்தால் சரி: என்று சொல்லிக் கொண்டே பெரியவர் மேலே சென் ருர். இரண்டு அடிகள் எடுத்துவைத்ததும் தனக்குப் பின்னல் வந்து கொண்டிருந்த ஒருவர் தடாலென்று கீழே விழும் சத்தம் அவருடைய காதில விழுந்தது. திரும்பிப் பார்த்தார்; வழுக்கி விழுந்தவரைக் கண்டு வாழைப்பழத்தோலை எறிந்தவன் சிரித்துக் கொண் டிருந்தான். அட பாவமே, அவனுடைய இஷ்டம் அவனேக் கஷ்டத்துக்கு உள்ளாக்காமல் இவரை யல்லவா கஷ்டத்துக்கு உள்ளாக்கிவிட்டது” என்று