பக்கம்:அன்பு மாலை.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை 3 5.

வெல்லற் கரிய பொறியெலாம்

வென்றவன் வீரனெனச்

சொல்லும் பெரியவன் ராம

சுரத்குமார் சோர்விலனே. 74

ஞானம் தோற்றும் அக்கால் சுகபோகம் புல்லும் ஞானம் உண்டாகும் போது ஆன்ம இன்பம் கிடைக்கும்.

விண்ண அளந்திடும் பேருண்டோ இந்த மிளிர்புவியில்

தண்ணீர் அலையைக் கணக்கிடு வாருண்டோ? தாழ்நதியில்

நண்ணு மணலுக்கோர்எண்ணுமுண் டாமோ நயந்துசொலின்

அண்ணலெம் ராம சுரத்குமார் சீருக் களவு மின்றே. 75

விண்ணே - ஆகாசத்தை.

தாபம் கெடுக்கும் மருத்துவன், மாயைத் தழல் தருசந் தாபம் கெடுக்கும் அருள்நீரைப் பாய்ச்சும் தனிமுகிலன்,

கோபம் கெடுக்கும் குருபரன், வஞ்சக் குழிகெடுக்கும் - பூபன்எம் ராம சுரத்குமார் என்னப் பொலிமுனியே. 76

தாபம் - மூன்று வகைத் தாபங்களே. சந்தாயம் - துன்பம்

மாயை வலையில் பட்டுமா ழாந்து மதிமயங்கி ஆய கடமை இதுவென வேயறி யாதமக்கள் காயகும் ராம சுரத்குமார் தன்னிடம் துன்னிவிட்டால் மேயநல் ஞானம் வெளிப்படும்; இன்ப விளைவுறுமே. 77

இன்பமே ஆயினும் துன்பமே ஆயினும் ஏதுறினும் அன்புடை நெஞ்சம் சிறிதும் கலங்காத அற்புதளும், தன்மை இதுவென் றுரைக்கண் தை தயாநிதியாம் நன்னயன், ராம சுரத்குமார் என்கின்ற நற்றவனே! 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/41&oldid=535562" இருந்து மீள்விக்கப்பட்டது