பக்கம்:அன்பு மாலை.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 அன்பு மாலை

ஆற்றைப்போல் நெஞ்சத் தலைகள்போல் எண்ணம் அடங்குவரேல் கூற்றைப்போ கச்செய்யும் ஆற்றை அறிந்திடல் கூடுமன்றே நீற்றைப் புனைந்த சிவபெரு மான் என நிற்கு மவன் தேற்ற முறும்ராம் சுரத்குமார் பாதங்கள் சேருமினே. 9 - . . . 7

ஆற்றை - வழியை. தேற்றம் - தெளிவு.

பந்தம் அகற்றப் பலமுறை கண்டு பயின்றிடுவீர். சந்தம் பலபாடிக் கோயிலில் வந்து தரிசியுங்கள்; கந்தம் கொளுந்தார் அணிகின்ற தோளன் கருதுமொரு தொந்தம் இலாதுறும் ராம சுரத்குமார் தாயவன்ே. 80 முறை - உபாயம். சந்தம் - பாடல். கந்தம் - நறுமணம் தொற். தம் - பிணைப்பு. மாயைக்குத் தோற்றுமனத்திற்கடிமையாய் வாழ்பவர்கள் சேயுற்ற தோற்றம் கொளும்ராம் சுரத்குமார் சேவ்டியைப் போயுற் றடைந்து வணங்கில்ை இன்பந்தான் புல்லுமன்ருே? தாயுற்ற அன்பினேக் காணலாம் சற்றும் தளர்வின்றியே. -M - . 8 I சேய் உற்ற - குழந்தை போலுள்ள. புல்லும் சேரும் தாய் உற்ற தாயைப் போன்ற. -

சொல்லுக்கடங்காச் சுகத்தினில் நிற்கின்ற சோதியவன், மல்லுக் கடங்காத பஞ்சேந் திரியம் வசப்படுத்தி - வெல்லுற்ற சூரன், அருணே நகரில் விளங்குபவன், - கல்லும் உருக்கிடும் ராம சுரத்குமார் கண்ணியனே. 32

o மல்லுக்கு - மல்லிடுதல் போல ச்செய்யும் முயற்சிகளுக்கு.

சொல்லொன்று செய்கை பிறதொன்ருச் செய்யும் துரிசுடையோர் வல்லொன்று கின்றன. ஐம்புலன் மாய்க்க வழியறியார் கல்லொன்று வந்த்ாலும் உள்ளே கரைக்கும் கதியறிவான். சொல்லொன்று காட்டிடும் ராம சுரத்குமார் தாமுனியே.

. . . 83

துரிசு - குற்றம், வல் - வன்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/42&oldid=535563" இருந்து மீள்விக்கப்பட்டது