உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

அன்பு முடி

யாரிடத்தில்" என்று அச்சோழர் சொல்லக்கேட்டு, எறிபத்தநாயனா ரானவர் பயப்பட்டு,-

45. "வலிமை பொருந்திய பெருமையாகிய தமது பட்டத்து யானையும் பாகரும் மடிந்துபோகவும், அதற்கு எவ்வளவும் விச னப்படாமல், உடைவாளைக் கொடுத்து, 'தாம் யானையை, ஒரு வர்க்குந் தீங்கு செய்யாமல் போகும்படி, செய்யவில்லை' என்பத னால் வந்த குற்றத்திற்காகத் தம்மையுங்கொல்லும்படி, பணிவோடு கேட்டுக்கொள்ளுகின்ற புகழ்ச்சோழராசாவாகிய சிவபக்தர்க்குத் தீங்கு நினைத்தேன்." என்று எண்ணி "முதலில் என் என்னுயிரைக் கொன்று முடித்துக்கொள்வதே தீர்ப்பு" என்று நினைத்து,

46. புகழ்ச்சோழராசாவானவர்,தம்மை,வெட்டும்படி எறி பத்த நாயனார் கையில் கொடுத்த வாளை, அவர், தம்முடைய கழுத்திற்சேர்த்து அறுத்துக்கொள்ளப் போனபோது, இராசா வும், 'பெரியோர்கள் செய்கை இப்படித்தா னிருக்குமோ? கெட் டேன்." என்று கீக்கிரத்தில் எதிராகப் போய், வலிமை பொருந் திய பெரிய கைகளால் தொடர்ந்து வாளையுங் கையையும், அவ ரெண்ணம் நிறைவேறாமல், தடுத்துப் பிடித்தார்.

47. புகழ்ச்சோழரானவர் விடாமல் பிடித்துக்கொண் டிருக்க, பக்தரானவர் தம்முடைய எண்ணம் நிறைவேறாமல் வருந்தி நிற்க, அத்தருணத்தில், அளவில்லாத அன்பினால், இருவருக்கும் உண்டாகிய இந்தத் துக்கத்தை நீக்கும்படியாக விரும்பி, விஷத்தைத் தரிக்காநின்ற கண்டத்தினையுடைய பரமசிவ னின் திருவருளால், அசரீரிவாக்கானது, பிரகாசத்தையுடைய ஆகாசத்தில், யாவருங்கேட்கும்படியாக உண்டாயிற்று. (களம் என்பது பண்பாகுபெயர்.)

48. (அந்த அசரீரிவாக்கினாற் பொருளாயின தென்ன வெனின்,) "யாவருந் தொழும்படியான தகுதியையுடைய அன் பிற் சிறந்தவர்களாகிய அடியார்களுடைய பக்தியை, உலகத் தில் காண்பிக்கச் செழுமை பொருந்திய அழகிய புஷ்பங்களை, இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/108&oldid=1559746" இலிருந்து மீள்விக்கப்பட்டது