உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரை

97

41. "யானையானது புஷ்பங்களைச் சிந்தித் தீங்கு செய்த போது, முன்னே ஓடுகின்ற குத்துக்கோற்காரரும், மேலே ஏறி நடத்துகின்ற பாகரும், அந்த யானையை விலக்காதிருந்தபடி யால், அக்குற்றத்தைப்பற்றி அவர்களும் இறந்தார்கள். இச்செய் கையே இவ்விடத்தில் நடந்தது," என்று எறிபத்த நாயனார்சொல்ல, பெரியமலைபோலும் விசாலமாகிய தோள்களையுடைய புகழ்ச்சோழ ராசாவானவர், பயப்பட்டு, எறிபத்தரது பாதங்களில் முறையாக வணங்கி,

42. "அழகிய கண்களையுடைய பரமசிவனாருடைய அடியார் களுக்குச் செய்த இப்படிப்பட்ட அபராதத்துக்கு, இந்த யானை யும் பாகரும் முகலாயினோர் இறந்தது மாத்திரமே போதாது; ஈடுகட்டும்படி அடியேனையும் கொல்லவேண்டும்; நன்மை பொருந்தியிருக்காநின்ற தேவரீர் கையிலுள்ள மழுவாயுதத்தால், இந்தப் பாவியைக் கொல்லுதல் நெறியன்று" என்று, தமது சிவப்பா கிய கையினால், உறையில் நின்றும் உடைவாளையுருவி, "இது தகுந்த து" என்று கொடுத்தார்,பாவத்தொழில்கள் தீரவேண்டு மென்கிற கருத்தையுடையவர்.

43. வெப்பமாகிய நெருப்பினது சுடர்போல் பிரகாசிக் கின்ற வாளாயுதத்தை நீட்டும் புகழ்ச்சோழருடைய பக்தியின் அழுத்தத்தைப் பார்த்து, "கெட்டேன் ! அளவில்லாத புகழை யுடைய இச்சோழராசாவினது பக்திக்கு, ஒரு எல்லையைக் காண்கி லேன்" என்று, கொடுத்தவாளை வாங்காதவராய்ப், பின்பு, அவர்கை யிலே வாளிருந்தால் தம்மைத்தாமே மாய்த்துக்கொள்வர், என்று மனதிலே ஆலோசித்துப் பயப்பட்டு, அடியார்களுடைய தீங்கு தீர்க்கும்படியான எறிபத்தநாயனார், அதை வாங்கினார்.

44. இவ்விதமாக, வாளை வாங்கிக்கொண்ட அடியவர்க்கு முன்பாக, இராசாவானவர், தொழுது நின்று, "இவ்விடத்தில் அடியேனை வாளினால் கொன்று, யான் செய்த அபராதத்தைத் தீர்க்கும் பொருட்டு, மிகவும் உதவிசெய்யப் பெற்றேன், இவ்வடி

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/107&oldid=1559745" இலிருந்து மீள்விக்கப்பட்டது