உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

அன்பு முடி

புகழ்ச்சோழர். (உளைவயப் புரவி,யென்று பாடஞ்சொல்லி, உளைக் குப் புறமயிரெனப் பொருள் கூறுதலும் உண்டு.)

38. பெரியதாய்க் கரிய நிறத்தையுடைய மலை போன்ற மதங்கொண்ட யானைக்கெதிராக, "இந்த வுண்மையாகிய தபசி யானவர், போனபோது,அவர்க்கு, வேறொரு அபாயம் சம்பவிக்காம லிருக்கும்படி பூர்வசன்மத்தில் புண்ணியம் பண்ணியிருந்தேன். நடேசருடைய அன்பராகிய இந்தப் பெரியவர் இவ்வளவு கோபித் துக்கொள்ள என்னபிழை யுண்டாயிற்றோ?" என்று பயப்பட்டு,- (கெட்டேனென்பது, துக்கத்தில் வரும் இடைச்சொல்லாம்.)

39. எறிபத்தநாயனாரைச் சூழ்ந்துகொண்ட தமது தமது பரி சனங்களை நீக்கி, அவ்வடியார்க்கு முன்பாகப் போய் நின்று கொண்டு, "இந்த யானை செய்த செய்கையை அடியேன் அறிந்தி ருக்கவில்லை; என்னரண்மனையில் நான் கேட்டவார்த்தை ஒரு வித மாயிருக்கின்றது; அது நிற்கட்டும்; எதிர்த்த இந்த யானையினால் உண்டான குற்றத்திற்குப் பாகரோடும் இந்த யானையைச் சாக மழு வால் துணித்தது போதுமா? அல்லது போதாவிடின் தேவரீர் கட் டளையிட்டபடி எப்படிப்பட்ட பிராயச்சித்தத்துக்கும் உள்ளாகின் றேன்; அருள் செய்யும்" என்று நின்றார். (அங்குக்கேட்டடதொன்று என்பது யானையை அடியார் கொன்று என்னாமல்சிலர் கொன்ற னர் என்று கேள்விப் படுதல்.)

40. தேவர்களுக்கு இறைவராகிய பரமசிவனது அடியா ரான எறிபத்தநாயனார், புகழ்ச்சோழரைப்பார்த்துச் 'சிவகாமியாண் டாரென்கிற பெரியவர், சர்ப்பங்களை ஆபரணமாகத் தரித்திருக் கின்ற கைலாசபதிக்குக் காலையிற் சாத்தும்படியாகக் கொண் டுவந்த புஷ்பங்களால் கட்டப்பட்ட மாலைகளை, தலையெடுப்பாய் உயர்ந்திருக்கின்ற உமது யானையானது, பறித்துக் கீழே சிந்தின படியால், அந்தயானை தரையில் விழும்படி வெட்டித்தள்ளினேன், (பள்ளித் தாமம் என்பது, காலை வேளையில் சுவாமிக்குச் சாத்தக் கட்டப்பட்ட மாலை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/106&oldid=1559744" இலிருந்து மீள்விக்கப்பட்டது