உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரை

95.

கின்ற ஒப்பற்ற மழுவாயுத மொன்றைக் கையில் தாங்கித் துதிக் கையன்றி வேறு இரண்டு பெரியகைகளை மாத்திரம் உடைய கொலைசெய்யும் யானைபோன்று நின்ற எறிபத்தநாயனாரைக் கண் டார். (எறிபத்தநாயனார் சிவபக்தராதலால், அவரைச் சத்துருவாக நினைக்காமல், வேறுசத்துரு இருக்கவேண்டும்' என நினைப்பவர், பகைப்புலத் தவரைக்காணான் என்றார்.)

35. பொற்பொடிகள் தவழ்கின்ற அருவியாற்றினையுடைய மலைபோல் புரண்டுகொண்டிருக்கும் யானைக்கு முன்னே நிற்கின் றவர், கனகசபையில் எக்காலத்திலும் தாண்டவஞ் செய்தருளு கின்ற கைலாசபதியினுடைய அடியவராயிருக்கின்றார். இவரே இந்த யானையைக் கொன்றவரென்று எவ்வளவும் நினைக்காதவ ராய, அதிரும்படியான சொற்களாக, "யானையைக்கொன்றவரி யாவர்' என்று கேட்டார் புகழ்ச்சோழர்.

36.

இராசாவானவரிப்படி சொன்னபோது, ஒழிந்து நின்ற பாகர்கள், அவர் அருகிற்சென்று, "வாசனை பொருந்திய புஷ்பங் களால் கட்டப்பட்ட மாலையையுடைய அரசரே, உம்முடைய வெற்றி பொருந்திய யானையோடெதிர்த்து நிற்பவர்கள், அலை மோதுகின்ற சமுத்திரஞ்சூழ்ந்த உலகத்திலிருக்கின்ற இராசாங்கங் களில் யாவரிருக்கின்றார்கள்? ஆதலால் மழுவாயுதத்தைக் கையில் கொண்டு இவ்விடத்தில் நிற்கின்றவரே கொன்றார்" என்று வணங் கிச்சொன்னார்கள்.

37.. "நாககுண்டலத்தைத் தரித்த திருச்செவியினையுடைய சுவாமிக்கு அன்பராய்க் குணங்களிற் சிறந்தவராகிய எறிபத்த நாயனார், யானையானது பிழை பிழை செய்தாலல்லாமல் கொல்ல மாட்டார். ஆகையினால் அதுகுற்றஞ் செய்திருக்கவேண்டும்” என்று மனதிலெண்ணி, மழைபோல் மதத்தைச் சொரிகின்ற யானையும் குதிரை காலாள் முதலிய மற்றைச் சேனையையும், அந்த இடத் துக்கு வர வொட்டாமல் நிறுத்தி, ஜெயத்துக்கு இடமாயிருக்கின்ற தமது குதிரையில் நின்று கீழே யிறங்கினார், உலகத்தை யாளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/105&oldid=1559743" இலிருந்து மீள்விக்கப்பட்டது