உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அன்பு முடி

கையும், திமிலையும், முழங்கச்செய்து, மற்றும் வேண்டிய ஒலி மிகு தற்கு ஏதுவாயிருக்கும் வாத்திய விசேஷங்களெல்லாம், போர் செய்யும் படைகள் அழகாய் நெருங்கினதினாலே, ஆகாயத்தில் சஞ் சரிக்கும் மேகக்கூட்டங்களின் ஒலிநாணும்படியாக, சேனைகளின் மருங்கே, சத்தித்து, எவ்விடத்திலும் கேட்ப,-(தட்டல் என்பது, வாத்தியங்களுக்கும் சொல்லக்கூடாதாகையால், முழங் குதலென, அதற்கு, ஆகுபெயர்ப்பொருள் கொண்டோம். அல்லது, தட்டப்படும் வாத்தியங்கள் அநேகமாதலால் மிகுதிபற்றிக் கூறினா ரெனினும் பொருந்தும்.)

எல்லா

32. பேரி வாத்தியத்தின் முழக்கமும், பிரகாசம் பொருந் திய ஆயுதங்கள் ஒன்றினோடொன்று தாக்குதலால் உண்டான முழக்கமும், குதிரையின் கழுத்தி லணிந்த ஒழுங்காகிய சதங்கை மாலைகளின் முழக்கமும், யானை வீரிடுகிற முழக்கமும், விசால மாகிய தேரோடுதலா லுண்டாகிய முழக்கமும், சுத்த வீரர்களு டைய கர்வத்தால் உண்டாகியமுழக்கமும், மிகவும் ஒன்றாய்ச் சேர்ந்தெழும்பியபோது, ஊழிக்காலத்தில் எழும்பிய மேகத்தோடு சங்கார காலத்தில் பொங்காநின்ற சமுத்திரத்தின் கோஷம்போல், முழங்கிற்று.

33. அலங்கரிக்கப்பட்டுள்ள ரதகச துரபதாகியாகப் பரவி யெழுகின்ற சேனைகளெல்லாம், பூமியில் ஊழிக் காற்றானது மேலும் மேலும் அடித்தெழும்பி வருகின்றதுபோலத் தோன்றக் குளிர்ச்சியாகிய கிருபைபொருந்திய குடையையுடைய புகழ்ச்சோழ ராசனானவர், சேனைகள் தமக்குப்பின்னே தொடர்ந்துவரத் தாம் ஒரு உயர்வாகிய குதிரையின்மேல் ஆரோகணித்து, அரசர்கள் தங் கிய வீதிவழியாகச் சென்றார். (இராசனுக்குள்ள இராசனுக்குள்ள கிருபையைக் குடைக்கு ஏற்றி, அளிக்கவிகை மன்ன, என்றார்.)

34. புகழ்ச் சோழராசரானவர், கடியவிசையிற் சென்று யானையோடு பாகர்களும் விழுந்திறந்த அமர்க்களத்தின் அருகில் சென்றார். சத்துருக்களைப் பார்க்காதவராய், காந்தீயை வீசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/104&oldid=1559742" இலிருந்து மீள்விக்கப்பட்டது