உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரை

93

டத்து யானை இறக்கும்படி, சில மனிதர்கள் கொன்றார்களென்று பாகர்சொல்லுகின்றார்கள்" என உரைத்தார்கள். (செற்றனர் சிலராமென்றது, எறிபத்தநாயனாரையும் சேர்த்தற்கு.)

28. புகழ்ச்சோழரும், இந்த வார்த்தையைக்கேட்ட

ளானது,

அளவில், மாறுபாடில்லாமல் உலகத்தைக் காக்கின்ற தோள்க வண்டினங்கள் மாலையிலும் பிரா வாழ்ந்திருக்கும காசித்து பூரிப்படைய, அளவில்லாத கோபங்கொண்டவரானபடி யால், 'யார் யானையைக் கொன்றவர்கள் என்றுகேட்கும் அவகாசமு. மில்லாதவராகி, இளஞ்சிங்கக் குட்டிபோல், அழகு பொருந்திய மணிகள் பதித்துள்ள அரண்மனைவாயில் நின்றும் வெளிப்பட,

29. இராசாவானவர் ஒருவராய்ப் புறப்பட்ட நிலைமை யைப் பார்த்து, அவருடைய சேனாதிபதிகளும், தங்களுடைய ணையின் கீழ்ப்பட்டிருக்கும் சேனைகள், அதிசீக்கிரமாய் எழுந்து வந்து, இராசாவை நாற்புறத்திலுஞ் சூழும்படி, பறைசாற்றுவிக்க, ஆகாசத்தின் விரிவிடமெல்லாம், அழகு பொருந்திய வஸ்திரக் கொடிகள் மறைக்க, சூத்திரம் வைத்திருக்கின்ற தேர்களும், குதி ரைகளும், நடுவில் நடுவில் யானைகளுமாய் நிரம்பி,-

30. வில், வேல், வாள், தண்டாயுதம், பிண்டிபாலம், வலிய இருப்புலக்கைகள், சக்கரம், மழுவாயுதம், சூலம், இவை முதலாகிய அநேக ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டு, அழ கிய வீரகண்டையைத் தரித்து, யுத்த விஷயத்தில், தாட்சணியமில் லாத அளவில்லாத வீரர்கள், சூழ்ந்து பல விடத்தில் நின்றும் எழுந்தார்கள்.கொட்புற்று, என்பதற்கு, போர்க்குச்செல்லும் போது, இடசாரி வலசாரியாகச் சுற்றிப் பலவித்தியாசமான அவ்வித்தையின் தொழில்களைச் செய்தென்று பொருள் கூறுத லும் ஒரு பட்சம்.)

31. சங்க வாத்தியமும், தாரையும்,காளமும், ஆழ்ந்து முழங்குகின்ற ஒலியையுடைய பேரியும், வெவ்விய நாதத்தைக் கொடுக்கின்ற பம்பையும்,தண்டையும்,பெருமை பொருந்திய உடுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/103&oldid=1559741" இலிருந்து மீள்விக்கப்பட்டது