உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

அன்பு முடி

என்று, பிரகாசம் பொருந்திய மழுவாயுதத்தைப் பலங்கொண்டு வீசி, காலால் எழும்பி யானைமேல் நடுங்கப் பாய்ந்தார்.

24. எறிபத்த நாயனார் பாய்ந்தவுடனே, அதிகவேகத் தோடு, அவர் மேற்செலுத்தா நின்றபாகரைத் தாங்கிக்கொண்டு சீறி, காய்ந்த நெருப்புப் பொறிகளைக் கக்காநின்ற கண்களை உடைய யானையானது, கோபங்கொண்டு பக்தர்மேலே திரும்பின அளவில், அதனுடைய பாய்தலைத் தடுத்து, எதிர்த்து, நிலத்திற் றோயும்படி நீண்டிருக்கும் ஒப்பற்ற பருத்த துதிக்கையானது அற்று விழும்பாடியாக, மழுவாயுதத்தினாலே, துணித்தார். ஆதலால், பயமானது தலைமையாகிய அன்பிற்கு முன்னே முன்னே எதிர்த்து நிற்கு மோ.(தாய்தலை - தொகுத்தல் விகாரம்.)

..

25. கரியமலைபோன்ற யானையானது, துதிக்கையை வெட்டின அளவில், சமுத்திரம் முழங்குவதுபோலக் கூச்சலிட் டுக் கீழே விழுந்து புரள, அருகில் வந்து கொண்டிருந்த வெப்பமா கிய குத்துக் கோல்களைத் தரித்த மூவரும், மேலேறிக் கொண்டி ருந்த பாகர் இருவரும், ஆகிய ஐந்து மனிதர்களையும், சங்கரித்து நின்றார், அரியமலை போன்ற தோள்களையுடைய எறிபத்த நாயனார்.

26. எறிபத்த நாயனாரால் வெட்டுப்பட்டு விழுந்தவர்கள் தவிர, யானைக்குச் சம்பந்தப்பட்ட மற்றவர்கள், ஓடி, தேன் விரிந்த மாலையைத் தரித்த புகழ்ச் சோழராசாவினது அரண்மனை வாயிலைக் காக்கின்றவர்களைப் பார்த்து, ""ஒருவனால் பட்டவர்த் தனமென்கிற யானையும் இறந்து, பாகர்களும் இறந்தார்கள்' என்று நீங்கள் சீக்கிரத்தில் சென்று இராசாவுக்குச் சொல்லுங்கள்" என் றார்கள். (கேடுண்டு என்பது, உண்டற்குரிய வல்லாப்பொருளை உண்டெனபோலக் கூறலுமியலுமே, என்பதனால் வந்தது.)

27. அவர்கள் சொன்ன வார்த்தையை, அழகிய வாயில் காப்போர்கள் கேட்டு, இராசாவின் சமூகத்தை அடைந்து, வீரகண்டை சப்திக்கின்ற அவரது பாதத்தை வணங்கி நின்று கொண்டு, "ஒரு சத்துருவும் இல்லாத மன்னனே, உமது பட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/102&oldid=1559740" இலிருந்து மீள்விக்கப்பட்டது