உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உரை

91

20.

இவ்வகையாகச்

சிவகாமியாண்டார்

முறையிட்டுச் சொன்ன வார்த்தையை, எதிரே வாராநின்ற எறிபத்தநாய னார் கேட்டு, முன்னமே நெருப்பைப்போற் சுடும்படி பெருமூச்சு விட்டு அதிக கோபங்கொண்டு, "சபாநாதருடைய அடியார்களுக்குப் பரம்பரையாகச் சத்துருவாயுள்ளது யானையல்லவோ? ஆதலால் அதைக்கொன்று கீழேவிழத் தள்ளுவேன்" என்று கொலைக்கேது வாயிருக்கின்ற மழுவாயுதத்தை யெடுத்துக்கொண்டு வந்தார்.

21. வந்த எறிபத்த நாயனார், முறையிட்டழைத்த சிவகாமி யாண்டாரைக்கண்டு தொழுது, தொழுது, "சுவாமீ, உம்மை இப்படி வருத்தமுற வலிய துன்பத்தைச் செய்த யானை எவ்விடத்தில் போ யிற்று' என்று கேட்க, அவர், "நமது ஆண்டவர்க்குச் சாத்தவேண் டிக்கொண்டுவந்த புஷ்பங்களைச் சிறிது நேரத்துக்குமுன் என்கையி லிருந்து பறித்துப் பூமியில் இறைத்துவிட்டுத் தப்பிப்போய்க் கொண்டிருக்கிறது இந்தத் தெருவின் வழியாக" என்றுசொன்னார்.

22. எறிபத்த நாயனார் கோபங்கொண்டு, "இனியிந்த யானையானது எப்படித் தப்பிப் பிழைத்துக்கொள்ளும் என்று. கூரியவாயின் வழியாக நெருப்பைக் கக்காநின்ற கையிற்பிடித்த மழுவாயுதமும் தாமும், வடவாமுகாக்கினியும் சண்டமாருதமும் போல், மிகுந்த விசையாகச்சென்று, போர் செய்யும் திறத்தை யுடைய யானையைத் தொடர்ந்து பிடிக்குஞ் சிவப்பாகிய நிறமுள்ள கண்களையுடைய ஒளி பொருந்திய சிங்கம்போன்று, யானையைக் கிட்டினார். (வாள் என்பதற்கு, வாள்போன்ற நகங்கள்எனக் கூறி னும் பொருந்தும்.)

23. அன்பராகிய எறிபத்தநாயனார்,

போது,

று

யானையைக்கண்ட

இது, சுவாமி, முன்னே கொன்று, தோலுரித்த அந்த யானைக்குச் சமானமாயிருப்பது போலும்" என்று நினைத்துத் "தேவர் களும், பூலோகத்தில் உள்ளவர்களும்,வந்து தடுத்தாலும், கோபித்து, இரத்தம் சிந்தும்படியாகத் துண்டஞ்செய்து, கொன்றுவிடுவேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/101&oldid=1559739" இலிருந்து மீள்விக்கப்பட்டது