உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு முடி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

அன்பு முடி

மன

கூடுமா? வேதாகம விருத்தமான கொடுஞ் செய்கைகளை தில் நினைத்த அசுரர்களுடைய முப்புரங்களும் நீறாக வெந்தழி தற்குச் காரணமாகப் பிடித்த மகாமேருவாகிய வில்லையுடையவரே வெந்தழிகிற அனுக்கிரகஞ் செய்தருளும்.(முப்புரங்களும் தற்கு சுவாமியினது நகையே அன்றி,வில் முதலானவை காரண மாகாமற் போயினும், முதலில் அவைகளையே ஏதுவாக எண் ணிப் போர்க்கோலங்கொண்டாராதலின், சிலைக்குச் சிறப்புண் டாகக் கூறினார். இதனால் மகாமேருவும் வணங்கி வசப்பட்டிருக் கும் உமக்கு, இந்த யானையோ ஒரு பொருட்டாக நிற்கும் என்பது. தோன்றிற்று.)

18. "தஞ்சமென்று உம்மை அபயஸ்தானமாக எண்ணி அடைந்த எளியவராகிய மார்க்கண்டேயருடைய நெஞ்சத் திலுள்ள துக்கங்கெட, எதிராகத்தொடர்ந்து ஓர் மேகம்போன்று நெருங்கிவந்த யமனுக்காக, சிறிதளவு நீண்ட அழகிய சிவந்த திருவடியையுடையவரே, அனுக்கிரகஞ் செய்தருளும். (வீழ் என்பதை அகரங் குறைந்துநின்ற செயவெ னெச்சமாக்கி, மேகம் போல்வீழ, என்று பொருள் கூறினும் பொருந்தும். செம்மை அழ கில் நின்றது.இறை நீளுதல் - மெல்ல உதைத்தல். அதனாலே யே எமன் மாய்தலால் சுவாமியின் வலியானது ஒப்பற்றதென்று குறிப்பிக்கப்பட்டுள்ளது: நமனை மாய்க்கிறதற்கு மனதில்ஒருப்பட்டு உதைக்க இல்லை யென்பது தோன்ற நீள், என்று திருவடியின் தொழிலாக்கினார்.)

மார்க்

19. "விஷ்ணுவினாலும் அறியக்கூடாத சிவானுபவ கத்தை, மிகவும் அறிந்தடையும்படியாக, அடிமைத்தனத்தை வகித்து, திருவூழியஞ் செய்கின்ற அடியார்களின் சிவபக்தருடைய வகையில், என்னை எதிற்சேர்ந்தவனாக நினைத்துவந்தனுக்கிரகம் பண்ணுவர், என்றும் அழிவில்லாத முதல்வராகிய பரமசிவனார்" என்று சொல்ல,-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/100&oldid=1559738" இலிருந்து மீள்விக்கப்பட்டது